சென்னை, ஜூன் 10 –
அரக்கோணம் அருகே நடந்த மின்சார ரயில் விபத்து வழக்கு ராணிப் பேட்டை விரைவு நீதிமன் றத்திற்கு மாற்றப்பட்டுள் ளது. வழக்கின் சாட்சி விசா ரணை விரைவில் தொடங்க இருக்கிறது.அரக்கோணத்தை அடுத் துள்ள மேல்பாக்கம் சித்தேரி என்ற இடத்தில் நின்று கொண்டு இருந்த பாசஞ் சர் ரயில்மீது, சென்னை கடற்கரையில் இருந்து வேலூ ருக்கு செல்லும் மின்சார ரெயில் கடந்த செப்டம்பர் மாதம் 13 ந் தேதி மோதி கவிழ்ந்தது.இந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள். 68 பேர் படுகாயம் அடைந்தனர். சிவப்பு விளக்கு எச்சரிக்கை சிக்னலை கவனிக்காமல் ரயிலை அதிவேகமாக ஓட் டியதே விபத்துக்கு கார ணம் என்று கூறப்பட்டது.இதுதொடர்பாக, சென்னை சென்டிரல் ரயில்வே துணை காவல் துறை கண்காணிப்பாளர் பொன் ராமு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத் தினார். விபத்துக்கான கார ணங்களை கண்டறியும் வித மாக மின்சார ரயிலை ஓட்டி வந்த ராஜ்குமாரின் செல்போன் அழைப்பு விவ ரங்களை காவல்துறையி னர் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், விபத்துக்கு நடந்த நேரத்துக்கு 10 வினாடிக்கு முன்பு வரை அவர் செல்போனில் பேசி யிருப்பதும், அதிக வேக மாக ரயிலை ஓட்டியதும் விபத்துக்கு காரணம் என் பது தெரியவந்தது. இதை யடுத்து மின்சார ரயில் என்ஜின் ஓட்டுநர் ராஜ் குமாரை காவல்துறையி னர் கைது செய்து அரக் கோணம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.3 மாதம் சிறையில் இருந்த ராஜ்குமார் தற்போது ஜாமீனில் வெளியே உள் ளார். இந்த வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணை மட்டும் மாஜிஸ்திரேட்டு நீதிமன் றத்தில் மேற்கொள்ளப்பட் டது. இதில், பெரிய குற்றச் சாட்டுகள் உள்ளதால், சாட்சி விசாரணைக்காக மேல் கோர்ட்டான ராணிப் பேட்டை விரைவு நீதிமன் றத்திற்கு வழக்கை மாற்றி வேலூர் மாவட்ட நீதிமன் றம் உத்தரவிட்டது.இதையடுத்து, ராணிப் பேட்டை விரைவு நீதிமன் றத்திற்கு வழக்கு மாற்றப் பட்டது. அங்கு சாட்சிக ளிடம் விசாரணை விரை வில் தொடங்க உள்ளது. வழக்கு சம்பந்தப்பட்ட சாட் சிகள் அங்கு விசாரிக்கப் பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

Leave a Reply

You must be logged in to post a comment.