வேலூர், ஜூன் 10-
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை பர்மா காலனியைச் சேர்ந்த வர் பாரத ரத்தினம். ஆடை களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம் மாள். இவர்களது இரண்டே கால் வயது பெண் குழந்தை ஹரிணி.பள்ளி மழலையர் பள்ளி யில் கூட சேர்க்காத நிலை யில் குழந்தையின் நினை வாற்றல் அனைவரையும் வியக்க வைக்கிறது. அகர முதல எழுத்தெல்லாம்… துவங்கி செல்வத்துள் செல் வம் உள்ள வரை என அனைத்து திருக்குறள்களை யும் குழந்தை ஹரிணி கட கட என்று ஒப்புவிக்கிறார். மேலும் கணபதி பாடல், ஆங்கில கவிதையும், சினிமா பாடல்களையும் மழலை மொழியில் சொல்லி அசத்து கிறார். இதை பார்த்து வியந்து அனைவரும் அக் குழந் தையை பாராட்டு கிறார்கள்.
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலூர், ஜூன் 10-
அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மை மாணவ, மாணவிகள் 2012-13 ஆம் ஆண்டுக்கான பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.வேலூர் மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவ் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘‘பெற்றோர் ஆண்டு வருமா னம் ரூ.1லட்சத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. பள்ளி இறுதித் தேர்வில் 50 விழுக்காடுக்கும் குறையாமல் மதிப் பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தில் அதிகபட் சமாக இருவருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங் கப்படும். வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்’’ என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கால்வாயில் தப்பி வந்த முதலை மீட்பு
திருவண்ணாமலை ஜுன் 10-
திருவண்ணாமலை அருகே துரிஞ்சலாற்றின் கால் வாயில் தப்பி வந்த ஆறடி நீளமுள்ள முதலையை பொது மக்கள் இரும்பு வலை கொண்டு பிடித்து வனத்துறை யினரிடம் ஒப்படைத்தனர். மழைக்காலங்களில் சாத்தனூர் அணை நீர் நிரம்பி திறந்து விடப்படும் போது அணையிலுள்ள முதலை தப்பி ஆற்று பகுதிகளுக்கு சென்றுவிடுகிறது. அப்படி தப்பி வந்த முதலை திருவண்ணாமலை அடுத்த சம்மந்த னூர் கிராம துரிஞ்சலாற்றங்கரைக்கு வந்து செல்வதை அடிக்கடி கிராம மக்கள் பார்த்துள்ளனர்.சனிக்கிழமை காலை அப்பகுதி மக்கள் ஆற்றங் கரையை கடக்கும்போது கரையோரம் முதலை இருந் ததை பார்த்து பீதியடைந்தனர். பின்னர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரும்பு வலையால் அந்த முதலையை பிடித்தனர், பின்னர் வனத்துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தனர், வனத்துறை அதிகாரிகள் முதலையை எடுத்து சென்று சாத்தனூர் அணை முதலை பண்ணைக்கு கொண்டு சென்றனர், மேலும் இந்த முதலை நன்னீர் வகை முதலை இனத்தை சார்ந்தது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.