வேலூர், ஜூன் 9-
வேலூர் மாநகராட்சி 60வது வார்டு பகுதியில் 15 நாட் களாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொது மக்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து மண்டலக்குழு தலைவர் ஐயப்பன் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தட்டுபாடு உள்ள பகுதியில் லாரி மூலம் உடனடியாக தண்ணீர் வழங்க உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: