புதுதில்லி, ஜூன் 9-மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) குறித்த தங்களின் மதிப் பீடுகளும் கருத்துகளும் மிக வும் தவறானவை என்று அன்னா ஹசாரேவுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் எழுதி யிருக்கிறது. சனிக்கிழமையன்று ஹசா ரேவுக்கு பிரதமர் அலுவலகத் திலிருந்து எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ஊழல் குறித்த விவகாரங்களை விசாரிப்ப தற்கு தனி புலனாய்வு அமைப்பு அமைக்க ஹசாரே கோரியிருந் ததை ஏற்பதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளது.மேலும், நிலக்கரி சுரங்கப் பணிகளை தனியாருக்கு ஒதுக் கீடு செய்ததில் முறைகேடு நடந் துள்ளதாகவும், இந்த முறை கேட்டில் பிரதமருக்கு தொடர் பிருப்பதாகவும், பிரதமர் மீது ஹசாரே குழுவினர் கூறிய புகாருக்கு, எழுத்துப் பூர்வ மான மறுப்புக் கடிதத்தை பிர தமர் அலுவலகம் அனுப்பி யுள்ளது.இந்த குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், விதிமுறைப் படியே நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கட்காரி எதிர்ப்பு
மத்திய அமைச்சர் நாரா யணசாமி சனிக்கிழமையன்று காலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசியபோது, அன்னா ஹசாரே எளிமையான மனிதர். ஆனால் அவரைச் சுற்றிலும் தேச விரோத சக்திகளும், வெளிநாட்டு சக்திகளின் ஆதரவு பெற்ற நபர்களும் உள்ளனர் என்று கூறினார்.மேலும் ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி ஆகி யோர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஹசாரே கடந்த ஆண்டு ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது வசூல் செய்யப்பட்ட பெரும் தொகை என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள விரும்பு கிறேன். சுரங்க ஒதுக்கீடு விஷ யத்தில் மன்மோகன் சிங் தலை மையிலான அரசு வெளிப் படையாக நடந்து கொண் டுள்ளது என்றும் நாராயண சாமி கூறினார்.நாராயணசாமி தெரிவித்த கருத்துக்கு, பாஜக தலைவர் நிதின் கட்காரி எதிர்ப்பு தெரி வித்துள்ளார். நாட்டு மக்களி டையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அர சுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை தேச விரோதிகள் என்று கூறுவதை நியாயப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: