ஓசூர், ஜூன் 9-
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சேலம் கோட் டம் சமூக வளர்ச்சி பிரிவின் கீழ் வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் 2011-20012 ஐ செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஓசூர் சிசிஐ கம்ப்யூட்டரில் அடிப்படை கணினி பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அழகுக் கலை பயிற்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கும் விழா ஓசூர் சங்கீத் ஆடிடோரியத்தில் நடைபெற்றது.பள்ளிப் படிப்பில் இடைநின்றவர்கள், படிக்க இய லாதவர்கள் தேர்வில் தவறியவர்கள், உயர்கல்வி தொடர இயலாதவர்கள் ஆகியோர் முன்னேற்றத்திற்காக மாதம் ரூ. 500 ஊக்கத்தொகையுடன் அளிக்கப்படும் சுய தொழில் பயிற்சியான கணினிக்கல்வி, அழகுக்கலை ஆகிய பயிற்சிகளை அரசு இத்திட்டத்தின் மூலம் செய்து வரு கிறது. ஒசூரில் இதன் அடிப்படையில் பயிற்சி பெற்ற 40 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கும் விழாவை ஓசூர் சிசிஐ கம்ப்யூட்டர் நிறுவன இயக்குநர் எழிலரசன் முன்நின்று நடத்தினார்.1.2 லட்சம் மதிப்பில் நடத்தப்பட்ட பயிற்சி சந்தீப் நந்தூரி, சேலம் கோட்ட பொறியாளர் செல்வகுமார், சேலம் கோட்ட சமூக அலுவலர் வசந்தக்குமார் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங் கினார்கள். ஓசூர் சிசிஐ கம்ப்யூட்டர்ஸ் நிறுவன இயக்கு நர் விழாவை ஒருங்கிணைத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave A Reply