பொள்ளாச்சி, ஜுன் 9-கோவை மாவட்டம் பொள் ளாச்சியை அடுத்து, வால் பாறை பகுதியிலுள்ள ஒருவீட்டின் சமையலறையில்நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த தூணின் இடுக்கில் சிக்கியது. பின்னர் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த சிறுத்தை பரிதாபமாக உயிரி ழந்தது.வால்பாறை சிறுவர் பூங்கா அருகே வசித்து வருபவர் பெரி யக்கா. தோட்டத் தொழிலாளி யான இவரது வீட்டின் பின் புறம் சமையலறை தனியாக உள்ளது. வெள்ளியன்று காலை வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு பெரியக்கா வேலைக்கு சென்றுவிட்டார்.இந்நிலையில்,அவரது வீட்டின் அருகே வசிப்பவர் கள், எதேச்சையாக பெரியக்கா வீட்டின் பின்புறம் சென்ற போது, சிறுத்தையைக் கண் டுள்ளனர். இதனால் பயந்து அதிர்ச்சியடைந்த அவர்கள். உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் அளித்தனர்.இதனையடுத்து மானாம்பள்ளி வனச்சரகர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சிறுத் தையை உயிருடன் பிடிக்கும் முன்னேற்பாடுகளை மேற் கொண்டனர். அப்போது, சிறுத் தையின் அருகில் சென்ற போது, சிறுத்தைப்புலி எவ்வித அசைவுமின்றி இருந்தது, இத னால் மிக அருகில் சென்று பார்த்தபோது சிறுத்தைப்புலி யின் உடல், அங்குள்ள தூணின் இடுக்கில் சிக்கியி ருப்பதும், வெளியேற முடியா மல் இறந்திருப்பதும் தெரியவந்தது. இறந்துபோன சிறுத்தை சுமார் ஒன்றரை வயதுள்ள பெண்சிறுத்தையாகும்.
இதன் உடலில் செந்நாய்க் கூட்டம் தாக்கியதற்கான தடயங்களும் காயங்களும் இருந்துள்ளன. கடந்த இரு தினங்களாக இரை எதுவும் உட்கொள்ளாத நிலை யில் மிகவும் பலவீனமாகக் காணப்பட்ட சிறுத்தை,இரை தேடி குடியிருப்புப் பகு திக்குள் வந்தபோது, பெரியக்கா வீட்டின் சமையலறை தூண் இடுக்கில் சிக்கியதால் அதிலி ருந்து வெளியேற முடியாமல் உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. எனினும் பிரேதப்பரிசோதனைக்குப் பிறகே முழு உண்மையும் தெரி யவரும் என்று வனத்துறை யினர் தெரிவித்துள்ளனர். குடி யிருப்புப் பகுதிக்கு வந்த சிறுத்தை, உயிரிழந்த செய் தியறிந்து ஏராளமான பொது மக்கள் சிறுத்தையின் உடலைப் பார்க்க சம்பவ இடத்தில் குவிந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply