விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் விவசாயிகளிடமிருந்து பருத்தி பஞ்சு மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. புதிதாக வந்துள்ள தனி அலுவலர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பஞ்சு மூட்டை களுக்கு பணம் வழங்கவில்லை. மேலும் கொள்முதல் செய்த பஞ்சு மூட்டைகளை விற்பனை செய்யவும் எவ்வித முன்முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று விவசாயிகளிடமிருந்து அரசுக்கு புகார் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகளும் ஆய்வு பணியை மேற் கொண்டுள்ளனர். அதன் பிறகும் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை. இதனால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் பாதுகாப்பில்லாமல் வெட்ட வெளியில் மழை, வெயிலில் வீணாகி வருகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகமும், துறை உயர் அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிலுவைத் தொகையை வழங்குவதுடன் மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.