ஆகஸ்ட் மாதம் முதல் நிதி அமைப்புகளின் ரென்மின்பி வைப்புத்தொகை மற்றும் கடல் வழங்குதலுக்கான வட்டி விகிதத்தை குறைக்க சீன மத்திய வங்கி ஜீன் 7ஆம் நாள் இரவு முடிவெடுத்துள்ளது. இதன்படி ஓராண்டுகால வைப்புத்தொகை வட்டி 3.25 சதவீதமாகவும் கடன் வழங்குதலுக்கான வட்டி 6.31 சதவீதமாகவும் இருக்கும் மூன்றரை ஆண்டுகளில் சீன மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைப்பது இதுவே முதல் முறை. வட்டி விகிதத்தைக் குறைப்பது தொழில் நிறுவனத்தின் உற்பத்தி செலவைக் குறைப்பது மட்டுமல்ல கடன் தேவையை அதிகரிக்க செய்யும் என்று சீன மத்திய நிதி பல்கலைக்கழகத்தின் வங்கித்துறை ஆய்வு மைய இயக்குநர் குவோ தியே யூங் தெரிவித்தார்.

Leave A Reply