சென்னை, ஜூன் 9-தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 மாதமாக கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் கேரளா வில் தென் மேற்கு பருவ மழை கடந்த 5ம் தேதி தொடங்கியதால் தென் தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்து வருகிறது. ஆனால் சென்னை மற்றும் வட தமிழ் நாட்டில் வெப்பம் நீடித்து வருகிறது. கடந்த 2 நாட் களாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது.வெள்ளியன்று (ஜூன் 8) இது 41 டிகிரியாக குறைந் தது. இந்த நிலையில் சென்னை வாசிகளுக்கு ஆறுதல் அளிக் கும் விதமாக வங்கக் கடலில் மழை சீசன் உருவாகியுள் ளது. இதனால் வறண்ட வானிலை மாறி, மேகக் கூட் டங்கள் உருவாகியுள்ளன.தமிழ்நாட்டின் வடக்கு பகுதி தொடங்கி ஆந்திரா, ஒடிசா கடற்கரை வரை மேகக் கூட்டங்கள் பரவி காணப் படுகின்றன. அது கடற்கரை பகுதி நோக்கி நெருங்கு கிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை யில் அடுத்த 48 மணி நேரத் துக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:
வங்கக்கடலில் உருவான மேகக் கூட்டம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை யில் அடுத்த 48 மணி நேரத் துக்கு மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்புள்ளது. சென் னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.கடந்த சில நாட்களாக நீடித்த வெப்பம் நேற்று சற்று குறைந்தது. ஒரு வாரத் தில் இது படிப்படியாக குறையும்.இவ்வாறு அவர் கூறி னார்.இதற்கிடையே கேரளா வில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. திருச்சூர் மாவட் டத்தில் 5 செ.மீ. கோழிக் கோட்டில் 4 செ.மீ., பாலக் காடு, எர்ணாகுளம், ஆலப் புழா, இடுக்கி, மலப்புரம், கோட்டயம், பத்தினம் திட்டா மாவட்டங்களிலும் 3 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது. தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் சின்ன கல்லா ரில் 6 செ.மீ. மழையும், வேலூர் காவேரிப்பாக்கம் மற்றும் வால்பாறையில் 4 செ.மீ. மழையும் தேனி மாவட்டம் பெரியாறு அணைப்பகுதி, ஸ்ரீபெரும் புதூர், ஏற்காடு, நீலகிரி நடுவட்டம் ஆகிய இடங் களில் 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது. கன்னியா குமரி மாவட்டத்தில் குளித் துறை, பேச்சிப் பாறையில் 1 செ.மீ. மழையும் பெய்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.