அரியலூர், ஜூன் 9-விவசாயத் தொழிலாளர் கள் தங்கள் வாழ்வாதாரத்தை மத்திய – மாநில அரசுகளிட மிருந்து போராடித்தான் பெற வேண்டும் என்று எஸ். திருநாவுக்கரசு கூறினார்.விவசாயத் தொழிலாளர் சங்க தா.பழூர் ஒன்றிய சிறப் புப் பேரவைக் கூட்டத்தில் விவ சாயத் தொழிலாளர் சங்க அகில இந்திய துணைத் தலை வர் எஸ்.திருநாவுக்கரசு பேசி னார். அவர் பேசியதாவது:தற்போது தமிழகத்தில் விவசாயம் என்பது மத்திய – மாநில அரசுகளின் கொள் கைகளால் கிராமப்புற விவ சாயம் முழுமையாக அழிவை நோக்கிச் செல்கிறது. கார ணம் தாராளமயம் என்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றும் பல் வேறு காரணங்கள் கூறி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர், விளை நிலம் அனைத்தையும் பணம் படைத்தவர்களுக்கு சலு கைகளாக வழங்குகிறது. ஆனால், மக்கள் மீது பல் வேறு சுமைகளை ஏற்றுகி றது. பன்னாட்டு முதலாளி களுக்கு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. அத்துடன் உணவுப் பொருள் பயிர் செய்யக் கூடிய விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் மற்றும் பணப் பயிர் போன் றவற்றிற்கு பல ஆயிரம் ஏக் கர் நிலத்தை அரசு வழங்கி யுள்ளது. இதனால் கிராமப் புற விவசாயம் அழிவை நோக்கிச் செல்கிறது. உரம், பூச்சி மருந்து விலை கடுமை யாக உயர்ந்துள்ளது.
மேலும் போதிய அளவு கிடைக்கப் பெறுவதில்லை. அதனால் விவசாயிகளும் பாதிக்கப் படுகின்றனர். விவசாயிகள் தங்களின் உரிமைகளை போராடி பெற வேண்டு மென்ற நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். அனைத்து விவசாயத் தொழிலாளர் களும் சேர்ந்து போராடி அரசிடம் இருந்து விவசாய உரிமைகளை பெற்றால் தான் மீதமுள்ள விவசாயி களாவது தொடர்ந்து விவ சாயம் செய்ய இயலும். கிரா மப்புற வேலைவாய்ப்பு உறு தியளிப்புத் திட்டத்தில் வேலை செய்ய தயாராக இருக்கும் அனைவருக்கும் வேலை வழங்கவில்லை என்று தெரிந்தால், உடனே உரிய அரசு அலுவலர்களி டம் உரிய முறையில் அணுகி அதனை பெற வேண்டு மென்று கூறினார்.அணைக்குடம் ராமர் இல்லத்தில் நடந்த சிறப்புப் பேரவைக் கூட்டத்திற்கு சங் கத்தின் ஒன்றியச் செயலா ளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமைதாங்கினார். ஒன் றியத் தலைவர் ஜி.ராமலிங் கம், ஏ.தங்கராசு, கே.சின்ன துரை, அழகேசன், வி.குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட் டத் தலைவர் ஏ.சவுரிராஜன், மாவட்டப் பொருளாளர் எம்.வெங்கடாசலம், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.பழனிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒன்றியக் குழு உறுப் பினர் ஆர்.செல்வராசு நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.