திருவாரூர், ஜூன் 9-அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், 6 வயது முதல் 14 வயது வரை உள்ள மாற்றுத்திறனுடைய குழந் தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 11ம்தேதி துவங்குகிறது.துவக்க நாளன்று காலை 9.30 மணி முதல் 12 மணி வரை திருவாரூர் ஆர்.சி.பாத்திமா நடுநிலைப்பள்ளியிலும், மாலை 2.30 மணி முதல் 4 மணி வரை நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடைபெறுகின்றன. இதேபோல 12ஆம் தேதி காலை கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், மாலையில் குடவாசல் ஓகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும், 13ஆம் தேதி காலை வலங்கைமான் கடைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியிலும், மாலை நீடாமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்திலும் 14ஆம் தேதி காலை மன் னார்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்திலும், மாலை கோட்டூர் அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி வளாகத்திலும், 15ஆம் தேதி காலை திருத் துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் மாலை முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.இம்முகாமிற்கு மனநல மருத்துவர், கண் மருத்துவர், காது மூக்கு, தொண்டை நிபுணர், எலும்பு முறிவு மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு மதிப்பீடு செய்ய உள்ளனர். மேலும் இம்முகாமில் தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் வழங்கப்படுவதோடு, தேவைப்படும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப் படும். எனவே முகாமில் கலந்து கொண்டு பலன் பெற வேண் டும் என மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: