லண்டன், ஜூன் 9-மக்களின் வரிப்பணத் தில் ராணிக்கு ஆடம்பர விழா நடத்துவதற்கு அந் நாட்டின் பொதுமக்கள் பல் வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர்.இங்கிலாந்தில் ராணி எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட 60-வது ஆண்டு வைர விழா ஆடம்பரமாக கொண்டாடப்பட்டு வருகி றது. இந்த விழாவுக்காக இங்கிலாந்து அரசு 300 கோடி பவுண்டை ஒதுக்கி யிருப்பதை அறிந்து அந் நாட்டு மக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். ஏற்க னவே இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட் டம், வறுமை, பொருளா தார நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனை சரி செய் வதற்கு இதுவரை உருப்படி யான திட்டம் எதையும் அரசு செயல்படுத்தவில்லை. அடிப்படை தேவையான உணவுப் பொருட்கள், குடி நீர், மின்சாரம் ஆகியவற் றுக்கு ஏழை மக்கள் பணம் செலவழிக்க வழியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனாலும் அரசிற்கு செலுத்த வேண்டிய வரிகளை முறை யாக செலுத்தி வருகின்ற னர். இந்நேரத்தில் மக்களின் வரிப்பணத்தில் இங்கி லாந்து அரசு 300 கோடி பவுண்டை ராணியின் ஆடம் பர விழாவுக்கு ஒதுக்கி இருப்பது மக்களை மேலும் ஆத்திரம் கொள்ள செய் திருக்கிறது.
இது ஏழை மற் றும் நடுத்தர மக்களை ஏமாற் றும் செயல் என கடுமையாக சாடியுள்ளனர்.இந்நிலையில் இங்கி லாந்தின் பல பகுதிகளில் தாங்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இருந்து அரசு இவ்வாறு ஊதாரித்தன மாக, ஆடம்பர செலவு செய் வதா? என்று கேள்வி எழுப்பி போராட்டத்தில் குதித்துள் ளனர்.கடந்த 4-ந்தேதி லண்ட னில் உள்ள தேம்ஸ் நதியில் ஆடம்பர படகு அணிவ குப்பு நடந்தது. இதில் ராணி எலிசபெத் ஒரு படகில் முன்னால் வர 1000 படகுகள் பின்னால் அணிவகுத்து வந்தன. இந்த ஆடம்பரத் தை பார்த்து லண்டன் மக் கள் திகைத்து போய் விட் டார்கள்.இதேநேரத்தில் தேம்ஸ் நதியின் மறுகரையில் ஆடம்பர படகு அணி வகுப்புக்கு எதிராக பலர் ஆர்ப்பாட்டம் நடத்தினார் கள். இங்கிலாந்தில் உள்ள 60 சதவிகித மக்கள் ஆடம் பரத்தை விரும்பவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஊடகங்கள் இந்த மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கா மல் ராணியின் வைரவிழா வையே முதன்மைப்படுத்தி ஒளிபரப்பி வந்தன. இது அந் நாட்டு மக்களை ஏமாற்ற மடைய செய்திருக்கிறது.காலத்துக்கு பொருந் தாத ஆடம்பர விழாவுக்கு எதிராக ஏழைகள் மட்டுமல் லாமல் நடுத்தர மக்களும் கொடி உயர்த்தி இருக்கிறார் கள். மக்களின் வரிப்பணம் வீணாக செலவு செய்யப்படு வதை தடுக்க ராணியோ அல்லது அவரது குடும்பத் தை சேர்ந்தவர்களோ முயற் சிக்க வேண்டும் என்றும், வீடில்லாத மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க இந்த பணத் தை செலவழிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.