சேலம், ஜூன்.9-ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளை கண்டித்து சனியன்று வாழப்பாடியில் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட உதவிச் செயலாளர் எம்.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சி.ஜான்கென்னடி, ஏ.வடிவேல், ஆர்.தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சின்னையன், செயலாளர் கே.டி.ராஜ், பொருளாளர் பி.செந்தில் குமார் ஆகியோர் பேசினர். இதில் ஆட்டோ தொழிலாளர்களை அழிக்க நினைக்கும் அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்தும், ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் ஜான்துரை, ரவிச்சந்திரன், சக்தி, அண்ணாதுரை, காளிதாஸ், சேகர், கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: