திருவள்ளூர், ஜூன் 9-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவள்ளூ ரில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. வட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பா. சுந்தர ராசன் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.அப்போது, திருவள் ளூர் நகராட்சியில் மக்களின் பொழுது போக்கிற்காக 96 இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அகர தெருவில் உள்ள ஒரு பூங்கா நிலத்தை தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து கட்ட டம் கட்டியுள்ளது. மேலும், அரசு பதிவேட்டில் பெயர் மாற்றமும் செய்துள்ளது அந்த பள்ளி நிர்வாகம். இது குறித்து நகராட்சி நிர்வாகத் திற்கு தகவல் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுக் கொள்ளவில்லை. இங்கு மட்டுமல்ல நகராட்சியின் பல இடங்களில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.ரயில் நிலையம் அருகில் ஒரு பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
அங்கு பேருந்துகள் நிற்பதற்கு போதுமான இடவசதி யில்லை. இதனால், பேருந்து கள் சாலையின் நடுவில்தான் நிற்கிறது. நகரத்தின் போக்கு வரத்து நெரிசலை குறைப் பதற்காக புதிதாக ஒரு பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி பல ஆண்டுகளாகியும் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை என்றும் சுந்தரரா சன் குற்றம் சாட்டினார்.

Leave A Reply

%d bloggers like this: