புனே, ஜூன். 9-மகாராஷ்டிர மாநிலம் புனே யில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் சில வருடங்களுக்கு முன்பு குண்டு வெடித்தது. அதன் பின் பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் ஸ்டேடி யத்திலும் குண்டு வெடிப்பு நடந்தது. தொடர்ந்து புனேயில் ஒரு கோவில் முன்பு வெடிகுண்டு வைக் கப்பட்டு இருந்தது. தக்க சமயத்தில் அது கண்டு பிடிக்கப்பட்டதால் குண்டு வெடிக்கும் முன்பே அகற் றப்பட்டு விட்டது. இந்த 3 சம்பவங் களிலும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி களுக்கு தொடர்பு இருப்பதை மகா ராஷ்டிர தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். குண்டு வெடிப்புக்குப்பின் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் தில்லி போலீசாரிடம் முக மது சித்திக் என்பவர் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டார். விசாரணை யில் இவர் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாதி என்றும், புனே, பெங்களூர் குண்டு வெடிப் பில் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து தில்லி போலீசார் அவரை கைது செய்தனர். குண்டு வெடிப்பு தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை போலீசார் முடிவு செய்த னர். கடந்த மே மாதம் 3-ந்தேதி புனே அழைத்து வரப்பட்டு நீதி மன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மே 28ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததும் சித்திக் நீதிமன்ற காவலில் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். வெள்ளிக்கிழமையுடன் காவல் முடிவடைந்ததால் மாலையில் சித்திக்கை புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்ட மிட்டு இருந்தனர்.ஆனால் காலையிலேயே சிறை யில் கைதிகளால் தாக்கப்பட்டு சித்திக் படுகொலை செய்யப்பட் டார். இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத் தினர். புனேயைச் சேர்ந்த பயங்கர ரவுடிகளான சரத்மொகல், அமோல் பாலே ராவ் ஆகியோர் சித்திக்கை படுகொலை செய்திருப் பது தெரியவந்தது. இருவரும் புனேயில் கொலை, ஆள் கடத்தல், பணம் பறிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு பயங்கர ரவுடிகளாக செயல்பட்டு வந்தனர். நகரையே கலக்கம் அடைய செய்ததால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு புனே சிறை யில் அடைக்கப்பட்டனர். சரத் மொகல் மீது 4 கொலை வழக்குகளும், பாலே ராவ் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல் வழக்குகளும் உள்ளன. இவர்களு டன் சித்திக்கும் அடைக்கப்பட்டு இருந்தார். இச்சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மாநில சி.ஐ.டி. பிரிவு போலீஸ் விசா ரணைக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக புனே சிறை கண்காணிப்பாளர் எஸ்.வி. கதவ்கார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். எரவாடா சிறை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிறைக்கு வெளியேயும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: