இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்ஒரு மார்க்சிய அணுகுமுறையை நோக்கிஆசிரியர் : இர்பான் அபீப், தமிழில் : இரா. சிசுபாலன்வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்,41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்அம்பத்தூர், சென்னை- 600098,பக்: 488, விலை:ரூ. 250/-
மார்க்சிய பார்வையில் வரலாற்றைக் கற்றிட
-ச. லெனின்
ஒரு மார்க்சிய அணுகுமுறையை நோக்கி இர்பான் அவர்களின் புத்தகம் எளிய தமிழில் சிறப்பாக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகம் “நளளயல in iனேயைn hளைவடிசல வடிறயசவள அயசஒளையஅ யீநசஉநயீவiடிn என்கிற ஆங்கில புத்தகத்தின் மொழிப் பெயர்ப்பாகும். இதை, இரா. சிசுபாலன் அழகிய தமிழில் எளிய நடையில் மொழிபெயர்த்து தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியுள்ளார்.ஆங்கிலத்தில் இப்புத்தகம் 1995லேயே வெளிவந்துவிட்டது. மார்க்சிய வரலாற்று ஆய்வாளரான இர்பான் அபீப், மார்ச்சிய நோக்கில் இந்திய வரலாற்றை ஆய்வு செய்யும் இந்நூல் 2010ல் தான் தமிழில் கிடைத்துள்ளது. வேறு யாரும் இதை செய்யாத நேரத்தில் என்சி பிஎச்சின் முயற்சி பாராட்டுக்குரியது. 1995க்கு முந்தைய முப்பது ஆண்டுகளாக வெளியிடப்பட்ட இர்பான் அபீப் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதில் இந்திய சமூக வரலாறு குறித்த பத்து ஆய்வுக் கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன.வரலாற்று ஆய்வாளர்களாலும், சமூக விஞ்ஞானிகளாலும், மார்க்சிய வல்லுநர் களாலும், இளம் மார்க்சியவாதிகளாலும் அதிகம் கவனம் செலுத்தப்படும் பல முக்கிய மான விவாதங்களை தனது கட்டுரையில் இர்பான் அபீப் ஆய்வு செய்து அளித் துள்ளார். குறிப்பாக மார்க்சிய வரலாற்று வரைவியல் குறித்த பிரச்சனைகள், இந்தியா வைப் பற்றி மார்க்சின் பார்வை, இந்திய வரலாற்றில் சாதிகள் போன்ற கட்டுரைகள் முக்கிய மானவை.
இவைகளை தவிர, காலனிய பொருளாதாரம், ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய நிலவுடமை முறை, முகலாய ஆட்சிகாலம் போன்றவைகள் குறித்தும் தனது கட்டுரைகளில் எழுதியுள்ளார்.“கடந்த கால பார்வைக்கும், நீண்ட வரலாற்றிலிருந்தும் (மானுட அனுபவம்) நிகழ் காலத்துக்கான தற்போதைய நடைமுறைக்கும் இடையில் ஒரு இயல்பான ஒற்றுமை நிலவுவதை மார்க்சியம் காண்கிறது“ என்று நூலின் முதல் கட்டுரையிலேயே அழுத்த மாக பதிவு செய்வதோடு, “ மார்க்சிய வரலாற்று வழியில் புதிய அம்சங்களைத் தேடுவ தில் தொடர் ஈடுபாடும், புதிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது அவசி யம்“ என்றும் குறிப்பிடுகிறார்.இந்த மேற்கண்ட அம்சத்தை உள்ளடக்கியே தனது ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். “இந்த உலகை அறிஞர்கள் மாற்றுவதுதான்” என்ற மார்க்சின் வார்த்தை களை இந்நேரத்தில் நினைவு கூருவது உகந்ததாக இருக்கும். இன்று பின் நவீனத் துவம் என்ற பெயரிலும், விளிம்புநிலை மக்கள் குறித்த ஆய்வு என்ற பெயரிலும் வெளி யிடப்படும் ஆய்வுகள், அவர்களின் துயரங்களை பட்டியலிடுவதில் தயாராக இருக் கின்றனவே ஒழிய இத்துயரங்களை போக்குவதற்கான வழிமுறைகளை வெளிக் கொணர மறுக்கின்றன, அல்லது அம்மக்களை கடந்தகால குறுகிய வட்டத்திற் குள்ளேயே முடக்கி, உண்மையான விடுதலைக்கு வழிவகுக்கும் பொதுவான போராட் டத்தில் ஒருங்கிணையாதவாறு பார்த்துக் கொள்கின்றனர்.பல்வேறு தளத்தில், பல்வேறு வகையில் ஒடுக்கப்படும் அனைவரையும் ஒருங் கிணைத்து, பொதுவான சுரண்டுதலுக்கு எதிராக நிறுத்துவதற்கு பதிலாக அவர்களை பிரித்தல் வேலையை முற்போக்கு என்கிற போர்வையிலேயே செய்கின்றனர். இவை களை விளக்கும் வகையில் “ விளிம்பு நிலை மனிதர்களுக்காக வாதிடும் அறிஞர்கள் துயரங்களை விளக்குவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். தீர்வு காண்பது அவர்களுடைய நோக்கமல்ல. ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கச் சுரண்டல் அமைப்பை பாதுகாப்பதன் மூலம் உண்மையில் அத்தகைய தீர்வு ஏற்படுவதில்லை” என்று இர்பான் அபீப் தனது கட்டுரையில் பதிவு செய்கிறார்.இந்தியா குறித்த மார்க்சின் பார்வை குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு தனது கட்டுரையில் அபீப் விளக்கியுள்ளார்.
“இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளதை காட்டிலும் நமக்கு கூடுதலாகத் தெரியும். அவருக்கு கிடைத்த விவரங்கள் எல்லைக்குட்பட்டவைகளாக இருந்த நிலையில் இந்தியாவை பற்றி அவர் குறிப்பிட்ட அம்சங்களே இறுதியானவை என ஏற்க இயலுமா? அறிவுத்துறை விரி வாக்கத்தின் விளைவாக கிடைத்துள்ள புதிய விவரங்களைக் கொண்டு பழைய விளக்கங்களை ஆய்வு செய்யும் கடமை நம்மீது சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர் நடவடிக்கையாகும்” என்று குறிப்பிடுகிறார். மேற்படி கருத்து ஏதோ மார்க்ஸ், இந்தியா குறித்து கூறியவைகள் எல்லாம் தவறு. மார்க்சின் கருத்துக்கள் எவையும் ஏற்புடையதல்ல என்ற அடிப்படையில் கூறப் பட்டவை அல்ல. மார்க்ஸ் 1859களில் தனக்கு கிடைத்த தகவலின் படி இந்திய சமூகம் குறித்தும், உற்பத்தி முறை குறித்தும் சில நிர்ணயிப்புகளுக்கு வந்தார். மனிதகுல வரலாற் றில் இருந்த முக்கிய உற்பத்தி முறைகளில் “ஆசிய உற்பத்தி முறை” தனிச்சிறப்பான இடத்தை பெறும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார். மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள், மார்க்சின் ஆசிய பாணி உற்பத்தி முறை குறித்து உடன்பாடான நிலையும், மாறுபட்ட நிலையும் எடுத்தனர்.
இர்பான் அபீப் அவர்கள் “ஆசிய உற்பத்தி முறை – மறுசிந்தனை” என்கிற தலைப்பில் பல முக்கியமான கருத்துக் களை முன்வைக்கிறார். 1867க்கு பிறகு இந்தியாவை பற்றி மார்க்ஸ் தொடர்ந்து ஆய்வு செய்து வெளியிட்ட கட்டுரைகளின் மூலம் காலனியத்துக்கு முந்தைய இந்தியாவை பற்றிய தனது ஆரம்ப காலக் கருத்துக்களை மறு ஆய்வு செய்ய நேர்ந்ததற்கான பல்வேறு உதாரணங்களை அபீப் குறிப்பிடுகிறார்.இந்திய சமூகத்திலும், பொருளாதாரத்திலும் உள்ள சில தனித்த அம்சங்களை அவர் ஏற்றுக் கொள்ளாமல் இல்லை. வேளாண்மையும், வேலைப்பிரிவினையின் அடிப்படையிலான, கைத் தொழிலும் ஒருங்கிணைந்து இந்திய கிராமப் பொருளா தாரத்தின் இரட்டைத் தூண்களாக இருந்தன என்ற முக்கியமான பகுப்பாய்வும், ஒட்டுண்ணித்தனமான இந்திய பொருளாதாரமும், மாறாத சமுதாயம் என்று மார்க்சே ஒரு காலத்தில் நினைத்த இந்திய சமுதாயத்தில் மாற்றத்துக்கான வழிமுறைகளை மேலும் அறிய இந்திய வரலாற்றாசிரியர்களுக்கு ஆதர்சமாக விளங்கும் என்கிறார்.குறிப்பான விளக்கங்களுடன் பொதுமைப்படுத்துதல் ஒரு முக்கிய அவசியம் என் பதை மார்க்ஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதனை முழுமையாக பயன்படுத்து வதற்கு மாறாக அதற்கான முயற்சியில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறேன் என்று இர்பான் அபீப் தன் னடக்கத்தோடு தனது முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும் இது இளம் ஆய்வாளர் களுக்கும், மார்க்சிய வாதிகளுக்கும் மார்க்சியப் பார்வையில் இந்திய வரலாற்றை கற்றுக் கொள்ள நிச்சயம் உதவியாக அமையும்.

Leave A Reply

%d bloggers like this: