புதுக்கோட்டை, ஜூன் 9-மக்கள் ஆதரவால் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஏறிவந்த ஏணி யை எட்டி உதைப்பதைப் போல அவர்களின் மீது சுமைகளை ஏற்றியுள்ளார். இடைத்தேர்தலில் இதற்கு சரியான பாடம் புகட்டுங் கள் என்று தேமுதிக தலை வர் விஜயகாந்த் கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆதர வோடு புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளராக களமிறங்கி உள்ள என்.ஜாகீர் உசேனை ஆதரித்து தொகுதி முழுவ தும் கடந்த புதன்கிழமை முதல் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.வெள்ளியன்று நடை பெற்ற பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது:இத்தேர்தலில் ஆளுங் கட்சி பணத்தையும், அதிகா ரத்தையும் நம்பி நிற்கிறது. நாங்கள் மக்களை நம்பி நிற் கிறோம். இத்தேர்தலில் அதி முகவைத் தோற்கடித்தால் மக்கள் நம்மை கண்காணித் துக் கொண்டே இருக்கிறார் கள் என்ற பயம் அரசுக்கு ஏற்படும்.நாட்டில் 45 சதவீதமான குழந்தைகள் சவலைப் பிள் ளைகளாகப் பிறக்கின்றன என்று மத்திய அரசு புள்ளி விவரம் சொல்கிறது.
இப் படி இருக்கின்ற நிலைமை யில் பால்விலையைக் கூட்டி னால் இந்த சதவீதம் மேலும் அதிகரிக்காதா?தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க ஆளுங்கட் சிக்கு ஆதரவாகவே செயல் படுகிறது. தேர்தல் தேதி அறி விப்பதற்கு முன்னரே ஆளுங் கட்சியினர் தொகுதிக்குள் பணத்தை பதுக்கி வைத்து விட்டனர். இப்பொழுது இரவோடு இரவாக பட்டு வாடாவை ஆரம்பித்து விட் டனர். நாங்கள் தைரியமாக பகலில் ஓட்டுக்கேட்கி றோம். ஆளுங்கட்சியினரோ திருடர்களைப் போல இர வில் பணத்தோடு அலை கின்றனர். பணப்பட்டுவா டாவைத் தடுங்கள் என்று தேர்தல் ஆணையத்திடம் சொன்னால், எங்கே காட் டுங்கள் கைது செய்கிறோம் என்கிறார்கள். இந்த மாவட்டத்திலுள்ள ஆறு தொகுதிகளில் ஐந்து பேர் ஆளுங்கட்சி யினராக இருக்கிறார்கள். இந்த மாவட்ட மக்களின் கோரிக் கைகளை சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டுமானால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு வராவது வேண்டும். எனவே, புதுக்கோட்டைத் தொகுதி வாக்காளர்கள் முரசு சின் னத்தில் வாக்களித்து என். ஜாகீர்உசேனை கோட் டைக்கு அனுப்புங்கள் எனக் கேட்டுக் கொள் கிறேன்.இவ்வாறு விஜய்காந்த் தனது பிரச்சாரத்தில் குறிப் பிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: