பிரெஞ்ச் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரஞ்ச் ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன்படி ஞாயிறன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் உலகத்தர வரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச் மற்றும் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் ஆகியோர் மோத உள்ளனர்.முன்னதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியின் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினின் ரபேல் நடால் சக நாட்டை சேர்ந்த டேவிட் பெரரை எதிர்த்து விளையாடினார். இதில் ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்திய ரபேல் நடால் 6-2, 6-2,6-1 என் நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேரினார். இதன்மூலம் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் ஆறு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற நடால் இறுதியாட்டத்திற்கு ஏழாவது முறையாக தகுதி பெற்றார்.இதேபோல், மற்றொரு அரையிறுதியாட்டத்தில் முதல்நிலை வீரரான ஜோகோவிச் 16 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றிய சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரரை எதிர்த்து விளையாடினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இருவீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். இறுதியில் ஜோகோவிச் 6-4,7-5,6-3 என்ற செட்கணக்கில் பெடரரை விழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தார். இதனால், ஞாயிறன்று நடைபெற உள்ள இறுதியாட்டத்தில் ரபேல் நடாலை எதிர்த்து ஜோகோவிச் விளையாட உள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: