சென்னை, ஜூன் 9-தமிழகத்தில் நடை பெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத் தைக் கொச்சைப்படுத்தும் கருத்துப்படம் (கார்ட்டூன்) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) தயாரித் துள்ள 12ம் வகுப்புக்கான பாடப்புத்தகத்தில் சேர்க்கப் பட்டிருப்பதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. மத்திய அரசு பாடப் புத்தகத்திலிருந்து அந்தக் கருத்துப் படத்தை உடனடி யாக நீக்க நடவடிக்கை எடுக்க வும் சங்கம் வலியுறுத்தியுள் ளது.இது தொடர்பாக சங்கத் தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடே சன் இருவரும் சனிக்கிழ மையன்று (ஜூன் 9) வெளி யிட்டுள்ள அறிக்கை வரு மாறு: தலித் மக்கள் விடுதலை இயக்கத் தலைவரும் இந்திய அரசமைப்பு சாசன சிற்பியு மான டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் விதமாக மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் (சிபி எஸ்இ) 11ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஒரு பழைய அரசியல் நையாண்டிப் படம் இடம் பெற்ற விவகா ரம் நாடு முழுவதும் சர்ச் சைக்குள்ளானது.
பரவலான எதிர்ப்பின் பின்னணியில் அதனை விலக்கிக்கொள்வ தாக மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் அறி வித்தது.அந்தப் பிரச்சனையின் சூடு தணிவதற்கு முன் இன் னொரு பிரச்சனை எழுந் துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (என்சிஇஆர்டி) தயா ரித்துள்ள 12ம் வகுப்பு மாண வர்களுக்கான `அரசியல் – அறிவியல்’ பாடப்புத்தகத் தில் 1960ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தித் திணிப் பிற்கு எதிராக நடந்த போராட்டத்தைக் கொச் சைப்படுத்தி அப்போது வெளியான ஒரு அரசியல் நையாண்டிச் சித்திரம் சேர்க்கப்பட்டுள்ளது.தேசிய மொழி – ஆட்சி மொழி பிரச்சனையில் தமி ழக மக்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காக நடந்த போராட்டத்தோடு இணைந்ததே இந்தித் திணிப் பிற்கு எதிரான கிளர்ச்சியா கும். சொல்லப்போனால் நாட்டின் விடுதலைப் போராட்ட காலகட்டத்தி லேயே இந்தித் திணிப்பிற்கு எதிரான இயக்கமும் தமி ழகத்தில் தொடங்கிவிட் டது.இந்தியை எதிர்க்கிற தமி ழக மாணவர்கள் வன்முறை யில் ஈடுபடுவது போலவும், அரசின் வாக்குறுதிகளை புரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு ஆங்கில அறிவு கூட இல்லாதவர்களாக அன்றைய தமிழக மாணவர் கள் இருந்தது போலவும், அந்த நையாண்டிச் சித்திரம் சித்தரிக்கிறது.இதனை வரைந்த ஓவியர் ஆர்.கே. லட்சுமணன் மீது தமுஎகச-வுக்கு மிகுந்த மரியாதை உண்டு.
அன் றைய சூழலில் இப்படியொரு கருத்துப்படத்தை வரைந்த அவரது வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் தமுஎகச மதிக்கிறது.ஆனால் ஒரு பள்ளிப் பாடப்புத்தகத்தில், அது அரசியல் அறிவியல் பாட நூலாகவே இருந்தபோதி லும், தற்போது அந்த நையாண்டி ஓவியம் சேர்க் கப்பட்டிருப்பதை விஷமத் தனமான செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட் டம் வெற்றிகரமாக நடந்த தன் காரணமாகவே மக்கள் ஏற்கிறவரையில் இருமொழிக் கொள்கை தொடரும் என்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் அன்று நேரு அரசுக்கு ஏற்பட்டது. 1965ல் அன்றைய மத்திய அரசு இவ்வாறு அறிவித்ததைத் தொடர்ந்துதான் இந்தி – ஆங்கிலம் ஆகிய இரு மொழி களும் ஆட்சி நிர்வாகத்தில் இன்றுவரையில் நீடிக்கின் றன. இல்லையேல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி யாக நிறுவப்பட்டிருக்கும். நேரு அரசு அளித்த அந்த வாக்குறுதியை அடுத்த டுத்து வந்த மத்திய ஆட்சி யாளர்கள் நேர்மையாக நிறைவேற்றவில்லை என் பதுதான் முக்கிய பிரச்சனை யாகும்.அந்தப் போராட்டத் தின் பலனாகவே தமிழ் வழியில் பள்ளிப்பாடங் களைப் பயிற்றுவிக்கும் பழக்கம் தமிழகத்தில் வளர்ந் தது. ஆராய்ச்சி, அரசு நிர் வாகம் உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளிலும் தமி ழக இளைஞர்கள் முன்னுக்கு வர தமிழ்வழிப் பயிற்சி உந்துதலாக அமைந்தது. காலப்போக்கில் இங்கு ஆங் கில வழி கல்வியின் ஆதிக்கத் திற்கு திராவிட இயக்க கட்சி களின் ஆட்சிகளில் வழிவகுக் கப்பட்டது என்பதுதான் விமர்சனத்திற்கு உரியதே யன்றி, இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட் டத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.இன்றைக்கும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியே ஆட்சி மொழி, மத்திய அரசுக்கும் மாநிலத்திற்கும் இடையே மாநில மொழியிலேயே தொடர்பு, நாடாளுமன்றம், நீதிமன்றங்களில் மாநில மொழி ஆளுமை, உயர் கல்வியிலும் மாநில மொழி என்ற நியாயமான அறிவி யல் பூர்வமான கோரிக்கை களை வலியுறுத்தும் இயக்கங் கள் வலுப்பெறவேண்டி யுள்ளது. ஒட்டுமொத்த இந் திய சமுதாயத்தின் சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இக்கோரிக்கைகளை வலி யுறுத்த வேண்டிய நேரத்தில், இதற்கு எதிரான உணர்வை மாணவர்கள் மனங்களில் விதைப்பதுபோல் இந்தக் கருத்துப்படம் பாடப்புத்த கத்தில் சேர்க்கப்பட்டிருப் பது கண்டனத்திற்குரியது.
மத்திய மனித வள மேம் பாட்டு அமைச்சகம் உடனடி யாக இதில் தலையிட்டு குறிப்பிட்ட கருத்துப்படத்தை விலக்கிக்கொள்வதுடன், அமைச்சர் ஏற்கெனவே வாக்களித்ததுபோல ஒரு முழு ஆய்வினை மேற் கொண்டு, ஆரோக்கியமான கல்வி மேம்பாட்டுக்கு தடை யாக இருக்கும் இப்படிப் பட்ட எதிர்மறை பாடங் களையும் படங்களையும் முற்றாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர்-கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: