வேலூர், ஜூன் 9
ஏழைகளுக்கும் வரத்து வங்கியுள்ள நீரிழிவு நோய் இன்னும் மூப்பது ஆண்டுக ளில் பல மடங்கு அதிகரித்து விடும் என்று மருத்துவர் மோகன் கூறினார்.டாக்டர் மோகன் கிளி னிக் சென்னை கோபால புரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல் பட்டு வரு கிறது. இந்த கிளினிக் லேன் முறையில் இணைக்கப்பட்டு மதுரை, சேலம், வேலூர் உள்ளிட்ட 12 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இதன் 13வது கிளை குடி யாத்தம் நகரில் திறக்கப்பட் டது.இந்த விழாவிற்கு தலை மை தாங்கிய மருத்துவர் மோகன், தமிழ்நாட்டில் பெரிய நகரங்களில் 20 விழுக் காடும், சிறிய நகரங்களிலும் கிராமப்புறங்களில் 10 விழுக்காடும் நீரிழிவு நோய் உள்ளது என்று ஆய்வு ஒன் றில் கண்டறியப்பட்டுள் ளது என்றார்.நீரிழிவு நோயை கட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண் டும்.
அப்படி இல்லை என் றால் 15 ஆண்டுகளில் உட லில் உள்ள உறுப்புகள் பழு தாகிவிடும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.குடியாத்தம் கிளையை துவக்கி வைத்து மதுரை நீரிழிவு மருத்துவ, ஆராய்ச்சி மைய நிபுணர் சந்திர மோகன் பேசுகையில், ஏழை, பணக்காரன், வயது என்ற பாகுபாடு இல்லாமல் அனை வருக்கும் நீரிழிவு நோய் வரும். நம் நாட்டில் இந்த நோய் குறித்து விழிப்புணர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. நோய் பாதிப்புகள் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என் றார். குடியாத்தம் கிளை பொறுப்பாளர் மருத்துவர் சுதாகர் வரவேற்றார். மருத் துவர் ரஞ்சித் உன்னி கிருஷ் ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: