பெங்களூர், ஜூன் 9-மதுரை மடத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட் டுள்ள நித்யானந்தா மீது அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஆர்த்தி ராவ் என்ற பெண் பாலியல் குற்றச் சாட்டு கூறி இருந்தார். இது தொடர்பாக பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில் நித்யானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது கன்னட அமைப்பை சேர்ந்தவர் களுக்கும் ஆசிரமத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கன்னட அமைப்பை சேர்ந்த 20 பேரும் ஆசிரமத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 18 பேரும் கைது செய்யப்பட்டனர்.ஆசிரமத்தை சேர்ந்தவர் கள் சனிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பிடதி ஆசிரமத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. ஆசிரமத்திற்கு பக் தர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.நித்யானந்தாவை கைது செய்யக்கோரியும் கர்நாட காவில் இருந்து வெளியேற்றக் கோரியும் கன்னட அமைப் புகள் சார்பில் சனிக்கிழமை கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெற் றது. பெங்களூர், மைசூர் உள்பட மாவட்ட தலைநக ரங்களில் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடை பெற்றது. போலீஸ் சூப் பிரண்டு அனுபம் அகர் வால் கூறும் போது, நித் யானந்தா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அவரை தேடி வரு கிறோம் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: