நாகப்பட்டினம், ஜூன் 9 -டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி யை நாகைப் புதிய பேருந்து நிலையம்- அவுரித் திடலிலி ருந்து, வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி கொடியசைத் துத் துவக்கி வைத்தார்.அப்போது பேசிய ஆட் சியர், ‘ஏடிஸ்’ ‘எஜிப்டி’ ஆகிய சிலவகைக் கொசுக் கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், உடல் சோர்வு, கண்களின் பின்புறத்தில் வலி, கை, கால் கணுக்களில் வலி, சுவையில் மாற்றம், வறண்ட தொண்டை போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக சிகிச்சை எடுத் துக் கொள்ளவேண்டும்.டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்கள் வீட்டிற்குள்ளும், வீட் டைச் சுற்றியும், நீர்த்தேக்கங் கள், புதிய கட்டுமானப் பகு திகள், தண்ணீர் சேகரிக்கும் பாத்திரங்கள், பூந்தொட்டி கள்,சிமெண்ட் தொட்டிகள், மண்பாண்டங்கள், மரச் சாமான்கள், மக்காத் தன்மை கொண்ட பிளாஸ் டிக் கப், கொட்டாங்கச்சி, முட்டை ஓடு, டயர்கள், பயன்படுத்தப் படாத மாவ ரைக்கும் குடக்கல், பாத்தி ரங்கள், தென்னைமரப் பாளைகள், மற்றும் தண் ணீர் தேங்கியிருக்க வாய்ப் புள்ள அனைத்து சாதனங் களிலும் இவ்வகைக் கொசுக் கள் உற்பத்தியாகிட வாய்ப் புள்ளது; எனவே, மேற் கண்ட பொருள்களில் தண் ணீர் தேங்கி, கொசுக்கள் உற் பத்தி யாகாதவாறு பொது மக்கள் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழிப்புணர்வுப் பேரணி, அவுரித் திடலிலிருந்து புறப் பட்டு, முக்கிய வீதிகள் வழி யாக ரயில் நிலையத்தை அடைந்தது.இப்பேரணியில் சாரண- சாரணியர், சுகாதாரத் துறை யினர், தேசியப் பசுமைப் படை, மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.இதேபோல, வியாழக்கிழ மையன்று, நாகூரிலும் விழிப்புணர்வுப் பேரணி யை மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி கொடியசைத் துத் துவக்கி வைத்தார். இப் பேரணி, பேருந்து நிலையத் திலிருந்து புறப்பட்டு பிடா ரிக் கோயில் தெரு, பெரு மாள் கீழவீதி, பெரிய மார்க் கெட், வழியாக நாகூர் தர் காவை அடைந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.