திருவாரூர், ஜூன் 9-இயற்கை இடர்பாடுகள், தென்மேற்கு பருவமழை, வெள் ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோ சனைக்கூட்டம், திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.நடராசன் தலை மையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் தென் மேற்கு பருவமழை தொடங்க வுள்ள நிலையில், கடலோர கிராமங்கள் புயல் வெள்ளத் தால் தாக்கப்படும் சாத்தியக் கூறு இருக்கின்றன. எனவே அந்த பகுதிகளை முன்னரே கண்டறிந்து சாக்கடைக் கால்வாய் பகுதிகளில் குப்பை மற்றும் செடி கொடிகளை சுத் தம் செய்ய வேண்டும், குடி நீரை சுத்தம் செய்து பாதுகாக் கப்பட்ட குடிநீர் வழங்க வேண் டும், மழை அளவு மானிகள் சரியாக இயங்குகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர், உதவியாளர், அலுவலக உதவியாளர் குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வெள்ளக்கட்டுப் பாட்டு அறை இயங்க வேண் டும் என்று அறிவுறுத்தினார்.1077 என்ற 4 இலக்க எண்ணுள்ள தொலைபேசி யை தொடர்பு கொண்டு விப ரங்களை தெரிவிக்க வேண் டும்.விபத்து ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை வெள்ளக்காலங்களில் ஏற் படும் நோய்களுக்கு மருந்து கள் மற்றும் நாய், பூச்சிக்கடி மருந்துகள், பாம்புக்கடி மருந் துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மின்சாரம் செல் லும் மின் கம்பிகள் முன்கூட் டியே ஆய்வு செய்யப்பட்டு மின் கசிவு ஏற்படாமலும் உட னுக்குடன் சரிசெய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.ஜீவகனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்ராசன் மற் றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: