புதுதில்லி, ஜூன் 9 -மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு திட்டத் துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2013-ம் கல்வி ஆண்டில் தனி நுழைவுத் தேர்வை நடத்தப் போவதாக கான்பூர் ஐஐடி நிர்வாகம் அறி வித்துள்ளது.மத்திய அரசின் நிதியுதவி யுடன் செயல்படும் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்வி நிறு வனங்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வினை நடத்து வது என மத்திய அரசு சமீபத் தில் அறிவித்தது. இதற்கு பல முனைகளிலிருந் தும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் கான் பூர் ஐஐடியில் 60க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வெள் ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது நுழை வுத் தேர்வை 2014-ம் கல்வி ஆண்டுக்கு பரிசீலிக்கலாம் என் றும் 2013-ம் ஆண்டுக்கு தனியே நுழைவுத் தேர்வு நடத்த கான் பூர் ஐஐடி சார்பில் தனிக்குழு அமைக்கப்படும் என்றும் முடி வெடுக்கப்பட் டது.கான்பூர் ஐஐடியின் தீர் மானம் குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கருத்து எதுவும் கூற வில்லை. இத்தீர்மானம் பற்றி ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.இதனிடையே கான்பூர் ஐஐடி தீர்மானத்தைப் பின் பற்றி மற்ற ஐஐடிகளும் தனி நுழை வுத் தேர்வு நடத்தக் கூடும் என வும் கூறப்படு கிறது.

Leave A Reply

%d bloggers like this: