தஞ்சாவூர், ஜூன் 9-தமிழ்நாட்டில் குறவர் பழங் குடி இனத்தவர் மீது காவல் துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதும், விசா ரணை என்ற பெயரில் சித்ர வதை செய்வதைக் கண்டித் தும் குறவன் இன பெண்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக குறவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தஞ்சா வூர் நகரம் மானோசுப்பட்டி அன்னை சிவகாமி நகரில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் கட்டட வேலை மற்றும் விவசாய வேலை களுக்கு சென்று அதன் வரு வாயில் குடும்பத்தை நடத்தி யும், குழந்தைகளை பள்ளியில் படிக்க வைத்தும் வருகின்ற னர். ஆனால் காவல்துறை யினர் இவர்களை, குற்றப்பரம் பரையாக கருதி, எங்கு திருட்டு நடந்தாலும் குறவர் இனத்தி னரை விசாரணைக்கு அழைத்துச் சென்று சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு சித்ரவதைகளை செய்வதும், பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைப் பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
தற்போது வீரைய்யன் மற் றும் நாகப்பன் ஆகிய இருவர் மீது பொய் வழக்குப்போட்டு அவர்களை சிறைக்கு அனுப்பி யுள்ளனர். மேலும் சோதனை என்றப் பெயரில் இவர்களின் வீட்டு பொருட்களை அடித்து நொறுக்கி போட்டுவிட்டு இரு சக்கர வாகனம் போன்றவற்றை காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் பெண் களை இழிவாக பேசி பொய் வழக்குப்போட்டு குடும்பத் தோடு சிறைக்கு அனுப்பு வதாகவும் காவல்துறை ஆய் வாளர் சோமசுந்தரம் மிரட்டி இருக்கிறார்.இதையடுத்து காவல்துறை யினரின் இந்த தொடர் அத்து மீறலைக் கண்டித்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு எதிர் புறம் மானோசுப்பட்டி அன்னை சிவகாமி நகரின் குறவர் பழங்குடி இனப்பெண் கள் காலவரையற்ற உண்ணா விரதத்தை வெள்ளியன்று தொடங்கியுள்ளனர். தங்க ளுக்கு இழைக்கப்படும் கொடு மைகளை எடுத்துச் சொல்லி பொது இடங்களில் போராட இவர்களுக்கு அனுமதி மறுக் கப்பட்டதால், அவர்கள் வசிக் கும் பகுதியிலேயே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற் கொண்டுள்ளதாக தெரிவிக் கின்றனர்.இந்நிலையில் பழங்குடி பெண்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாலதி, மாவட் டக் குழு உறுப்பினர் கே.அபி மன்னன், ஒன்றியச் செயலா ளர் ஏ.வெண்மணிகுமார், நகரச் செயலாளர் பி.செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர் வாகி வழக்கறிஞர் சா.விவே கானந்தன், சொக்கா ரவி, வீர. வெற்றிவேந்தன், குறவர் – பழங் குடியின தலைவர்கள் என். பாலு, எம்.கே.முருகன் ஆகி யோரும் ஆதரவு தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.