துடியலூர், ஜூன் 9- கோவையில் திறந்த வெளியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். கோவை, துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளை யத்தில் உள்ள பாருடன் கூடிய டாஸ்மாக் கடை உள்ளது. இங்குள்ள பார் திறந்த வெளியில் செயல் பட்டு வந்தது. இதனால், பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பாரை இடமாற்றம் செய் யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, அப்பகு திக்குச் சென்ற ஆட்சியர் டாஸ்மாக் கடை மற்றும் பாரை நேரில் ஆய்வு செய் தார். பின்னர், டாஸ்மாக் கடையை வேறு இடத் திற்கு மாற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இதேபோல், நரசிம்ம நாயக்கன்பாளையம் தன லட்சுமி நகர் 7 வது வார் டில் 34 லட்சம் செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வரும் சமுதாயக் கூடத்தை பார்வையிட் டார். மேலும், சிமெண்ட் கலவைகள் சரியான முறை யில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார். அவரிடம் பேரூராட்சி தலைவர் ஆனந்தன், பூச்சி யூரிலிருந்து அரிஜன காலனி வழியாக செல்லும் பள்ளிப் பள்ளம் ராக்கிய பாளையத்தில் இருந்து கிருஷ்ணாநகர் வரை தடுப் புச் சுவர் கட்ட நிதி ஒதுக் கும் படி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு, அவர் இதுகுறித்து பரீசலனை செய்யப்படும் எனக் கூறினார். ஆய்வின் போது, பேரூ ராட்சி அலுவலர்கள் மற் றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.