1929 டிசம்பர் 21 அன்று தனது 50வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களையும் பரிசுப் பொருள்களையும் அனுப்பிய அனைத்து அமைப்புகளுக்கும் தோழர்களுக்கும் ஸ்டாலின் பதில் அனுப்பினார். இது அவரின் எளிமையையும் உலகப் புரட்சிக்கான அவரது முழுமையான ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. “என்னை ஈன்றெடுத்து தன்னைப் போலவே உயர்த்தியுள்ள உழைக்கும் வர்க்க கட்சிக்கு உங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நான் சமர்ப்பிக்கிறேன். நமது புகழ் வாய்ந்த லெனினிஸ்ட் கட்சிக்கு அவற்றை சமர்ப்பிக்கும் காரணத்தால், உங்களுக்கு போல்ஷ்விக் நன்றியைத் தெரிவிக்கத் துணிகிறேன் ……. எனது வாழ்நாள் முழுவதும் உடலில் ஒரு துளி ரத்தம் உள்ள வரையிலும் உழைக்கும் மக்கள் நலனுக்காக, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக, உலகக் கம்யூனிஸத்துக்காக எதிர்காலத்திலும் என்னை அர்ப்பணித்துக் கொள்வேன். தோழர்களே.
இதில் எந்த சந்தேகமும் உங்களுக்குத் தேவையில்லை”1930 ஆகஸ்டில் தோழர் ஸ்தாத்க்னோவ்ஸ்கி (ளவயவமnடிஎளமல)க்கு அவர் எழுதிய கடிதத்தில், தனிநபர்கள் துதிபாடலை, தற்பெருமையை ஏற்படுத்தும் பலவீனமான அறிவுஜீவிகளின் பயனற்ற அற்ப செயல் என்று அவர் கண்டித்தார். “எனக்கு வழிபாடு செய்வதாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஒரு வேளை அது ஒரு தற்செயலாக உருவான தொடராக இருக்கலாம். ஆனால், இந்தத் தொடர் அப்படி இல்லாவிட்டால் தனிநபர்கள் வழிபாடு எனும் “ கொள்கையை” கைவிட்டு விடுங்கள் என்று உங்களுக்கு அறிவுரை கூறுவேன். அது போல்ஷ்விக் பாதை அல்ல. உழைக்கும் வர்க்கத்திடமும் அதன் கட்சியிடமும், அதன் அரசிடமும் மதிப்பு வையுங்கள். அதுதான் சிறந்தது. பயனுடையதுமாகும். ஆனால் இதனை பலவீனமான அறிவுஜீவிகளின் பயனற்ற அற்பப் பாராட்டான தனிநபர் வழிபாட்டோடு சேர்த்துக் குழப்பி விடாதீர்கள்”1931 டிசம்பர் 13 அன்று ஜெர்மன் எழுத்தாளர் எமில் லூத்விக் ஸ்டாலினை பேட்டி கண்டார். லூத்விக் பல கேள்விகளைக் கேட்டார். அனைத்துக் கேள்விகளுக்கும் ஸ்டாலின் பதிலளித்தார். ஸ்டாலின் தன்னைப் பற்றி என்ன அணுகுமுறை கொண்டிருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள இரண்டு கேள்விகளும் பதில்களும் மிகவும் முக்கியமானவையாகும்.
முதல் கேள்வி: “மகா பீட்டரின் பணியைத் தொடர்பவர் என்று நீங்கள் உங்களைக் கருதுகிறீர்களா?” ஸ்டாலின் பதில்: “எந்த வகையிலும் இல்லை. வரலாற்று ரீதியில் ஒப்பிட்டுப் பார்ப்பது எப்போதும் ஆபத்தானது. இதில் அர்த்தமும் இல்லை” இரண்டாவது கேள்வி:“ஆனால் மகா பீட்டர் தனது நாட்டை மேம்படுத்த அரும்பாடுபட்டார் அல்லவா?” ஸ்டாலின் பதில் : “ ஆம்! உண்மைதான். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை உயர்த்தவும் முழு வளர்ச்சி பெறாத வணிக வர்க்கத்தை மேலும் வளர்க்கவும் பீட்டர் நிறையவே செய்தார். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் உயர்வும் வணிக வர்க்கத்துக்கான உதவியும் ரத்தம் சிந்திய விவசாயப் பண்ணை யாட்களின் உழைப்பில் விளைந்தவை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும்”“என்னைப் பொறுத்தவரை, நான் லெனினின் மாணவன். எனது வாழ்க்கையின் நோக்கம் அவரது தகுதிபடைத்த மாணவனாக இருக்க வேண்டும் என்பது தான். வித்தியாசமான ஒரு வர்க்கத்தின் – உழைக்கும் வர்க்கத்தின் உயர்வுக்காக நான் எனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன் – உழைக்கும் வர்க்கத்தை உயர்த்தவும், அந்த வர்க்கத்தின் சோஷலிச அரசை வலுப்படுத்தவும் பெருமுயற்சியோடு நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உழைக்கும் வர்க்கத்தை வலுப்படுத்தி மேம்படுத்தும் திசையில் செல்லாமல் போனால் எனது வாழ்க்கையை அர்த்தமற்றதாகவே நான் கருதுவேன்”-ஜோசப் ஸ்டாலின்

Leave a Reply

You must be logged in to post a comment.