பொதுத்தேர்வுகள் : சாதனை மாணவர்கள்
கோவை, ஜூன்.9-கோவை சிங்காநல்லூரை சேர்ந்த எம்.ரோகிந்த் என்ற மாணவன் சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் 451 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை எஸ்.மோகன், சிஐடியு தையல் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை அன்னூரை சேர்ந்த சினேகாகோகுல் என்ற மாணவி பனிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1082 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். சிஐடியு டெம்போ சங்கத்தின் தலைவரான எம்.வி.கோகுல் இவரது தந்தையாவர்.

கோவை : ஆதரவற்றோருக்கு உபயோகப் பொருட்கள்
கோவை, ஜூன் 9-கோவை கண்ணன் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் நிறுவனமும், பன்னாட்டு அரிமா மாவட்டம் 32 பி1 என்ற அமைப்பும் இணைந்து பல்வேறு வகையான உபயோகப் பொருட்களை ஆதரவற்ற ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கோவை சபர்மன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்வமைப்பின் சார்பில் சூலூர், வெள்ளகோவில் பகுதிகளில் பொதுமக்களிடம் நேரடியாக பெறப்பட்ட பல்வேறு வகையான உபயோகப் பொருட்களை பழுது நீக்க பராமரித்து இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. ஆதரவற்றோர், பள்ளிக் கூடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் கோவையில் உள்ள 35க்கும் மேற்பட்ட அமைப்புகளிடம் வழங்கப்பட்டது. இந்த சேவை பணி குறித்து கண்ணன் டிப்பார்ட்மென்டல் தலைவர் டி. தனுஷ்கரன் தெரிவிக்கையில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இதேபோல் வழங்கினோம் என்றார். அரிமா மாவட்ட ஆர். சசிடேவிட் தெரிவிக்கையில் தமிழகம் முழுவதும் ரூ.25 கோடி மதிப்பிலான பொருட்களை தகுதியானர்வகளுக்கு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் கோவை தொழில் வர்த்தக சபை தலைவர் எம். கிருஷ்ணன், கிருஷ்ணா கல்லூரி சிஇஒ., சி.ஆர்.சாமிநாதன், கணபதி சில்க்ஸ் தலைவர் முத்துசாமி, சிறுதுளி தலைவர் வனிதா மோகன், கமலா ஸ்டோர் சுதேஷ், அண்ணபூர்னா குருப் இயக்குநர் எஸ்.விவேக் சீனிவாசன், சார்ப் டூல்ஸ் கே.ஆர். பாண்டியன், ஆர்.வி.எஸ். குரூப் தலைவர் செந்தில் கணேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: