இன்றைய நிகழ்ச்சி
தமுஎகச திருக்காட் டுப்பள்ளி கிளையின் சார்பில் கலை இரவு: மாலை 6 மணி, தி.கா. பள்ளி பேரூராட்சி நடே சன் செட்டியார் நினை வுக் கலையரங்கம், தஞ் சாவூர்.

காவல்துறையினர் போல வேடமணிந்துவசூல்வேட்டை:4 பேர் கைது
மதுரை, ஜூன் 9-மதுரையில் காவல் துறையினர் வேட மணிந்து வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த கும்பல் கைது செய்யப் பட்டுள் ளது.மதுரை ஆலங்குளத் தைச் சேர்ந்தவர் நவீன் ராஜ் (22).இவர் மருத்து வப் பிரதி நிதியாக வேலை செய்கிறார். காரைக் குடிக்குச் சென்று விட்டு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது அவரது வாக னம் பழுது ஏற்பட்டுள் ளது. உடனடியாக அவ ரது நண் பரைத்தொடர்பு கொண்டு வேறு வண்டி யைக் கொண்டு வரச் சொல்லியுள்ளார். பழு தான வாகனத்தைப் பின் னால் இருந்து பிடித்துக் கொள்ள அவரது நண்பர் வேறுவாகனத்தை ஓட் டிச்சென்றுள்ளார்.அப்போது, பீபீகுளம் உழவர் சந்தை அருகே காவல்துறையினர் உடை யணிந்த நான்கு பேர் நவீன் ராஜை வழிமறித்து வாகனத்தின் ஆவணங் களைக் கேட்டுள்ளனர்.
அவரும் அனைத்து ஆவ ணங்களைக் காட்டியும் 500 ரூபாய் தந்தால் தான் வாக னத்தை விடுவோம் என்று கூறியுள்ளனர். அப் போது அவ்வழியாக செல் லும் இருசக்கர வாகனங் களை நிறுத்தி சோதனை என்ற பெயரில் பணம் வாங்கியுள்ளனர்.அப்போது, தல்லா குளம் காவல்துறையினர் அவ்வழியாக ரோந்து சென் றுள்ளனர். நான்கு பேர் வாகனச்சோதனை செய்வதைக் கண்டு அவர் களிடம் விசாரணை நடத் தியதில் அவர்கள் காவல் துறையினர் இல்லை எனத்தெரியவந்தது. அவர் களைப் பிடித்து விசா ரித்ததில் மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்த ராஜ் குமார் (27), மணலூரைச் சேர்ந்த மகேந்திரன்(24), நெல்பேட் டையைச் சேர்ந்த சுரேஷ் (20), ஊமச் சிகுளத்தைச் சேர்ந்த தாம ரைக்கண்ணன் (20) எனத் தெரியவந்தது. பிடிபட்ட நான்குபேரும் மதுரையில் உள்ள ஒரு பிர பலமான பெருங்காயக்கம்பெனி யில் பணிபுரிவதாக தெரி யவந்தது.அவர்களைக் கைது செய்த காவல்துறை யினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண மண்டபத்தில்34 பவுன் நகை, பணம் திருட்டு
மதுரை, ஜூன் 8-மதுரையில் நடை பெறும் திருமணத்திற்கு வந்த குஜராத்தைச் சேர்ந்த பெண்ணிடம் 34 பவுன் நகை, 59 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திரு மண மண்டபத்தில் திரு டப்பட்டுள்ளது.குஜராத் ஜாம்நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவ ரது மனைவி ரேகா(37). இவரது உறவினரது திரு மணம் மதுரையில் உள்ள திருமணமண்டபத்தில் வெள்ளியன்று நடக்க இருந்தது. அதற்காக வந்த அவர் வியாழனன்று நடைபெற்ற நிச்சய தார்த்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் வைத் திருந்த பை காணாமல் போய் விட்டது.34 பவுன் நகை, 59 ஆயி ரத்து 500 ரூபாய், ஒரு செல்போன் ஆகியவை அப்பையில் இருந்துள் ளது.

Leave A Reply

%d bloggers like this: