பத்திரிகையாளர் சோலை படத்திறப்பு – நினைவேந்தல்
சென்னை, ஜூன் 9-மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோலையின் படத் திறப்பு நிகழ்ச்சி மற்றும் நினைவேந்தல் கூட்டம் ஞாயி றன்று (ஜூன் 10) மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சிக்கு விடு தலை நாளிதழ் ஆசிரியர் கி. வீரமணி தலைமை ஏற்கிறார். மூத்த பத்திரிகையாளர்கள் நாத்திகம் பாலு, விடுதலை ராதா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.உழவனின் நில உரிமை இயக்கச் செயலாளரும், முது பெரும் சர்வோதய தலைவியு மான பத்மஸ்ரீ கிருஷ்ணம் மாள் ஜெகன்நாதன், பத்திரி கையாளர் சோலை படத்தை திறந்து வைக்கிறார்.திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், மூத்த பத் திரிகையாளர் சு.பொ.அகத்தியலிங்கம் (தீக்கதிர்), முன் னாள் அமைச்சர் சு.திருநாவுக்கரசர், ஞானியார் அடிகள் தமிழ் மன்றத்தின் தலைவர் அ.ந.பாலகிருஷ்ணன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றுகின்றனர்.இந்த நிகழ்ச்சி சோலை வாசகர் வட்டம் சார்பில் நடைபெறவுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அ.சாதிக் பாட்சா வரவேற்கிறார். சோலையின் இளைய மகன் சோ.மாதவன் நன்றி கூறுகிறார். பத்திரிகையாளர் கோவி.லெனின் நிகழ்ச் சியை தொகுத்து வழங்குகிறார்.

தங்கம் விலை பவுனுக்கு224 ரூபாய் அதிகரித்தது
சென்னை, ஜூன் 9-சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந் தியாவில் தங்கம் விலை ஏறி, இறங்கியபடி உள்ளது. கடந்த சில மாதங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தை நெருங்கியது.ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்துக்கு வந்து விடும் என்று கூறப்பட்டது. ஏழை, எளிய மக்களை அச்சுறுத்திய தங்கம் விலை உயர்வு இந்த வாரத் தொடக்கத்தில் குறைந்தது. குறிப்பாக கடந்த 2 நாளில் தங்கம் விலையில் பெரும் சரிவு காணப்பட்டது. வெள்ளியன்று (ஜூன் 8) ஒரே நாளில் தங்கம் விலை பவு னுக்கு ரூ.424 குறைந்தது.சென்னையில் வெள்ளியன்று (ஜூன் 8) ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்துக்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.2750-க்கும் விற்பனையானது. 10 நாள் இடைவெளியில் தங்கம் விலை பவுனுக்கு சுமார் ரூ.ஆயிரம் வரை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.நகைக்கடைகளிலும் கூட்டம் அதிகரித்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 9) காலை நீடிக்க வில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.2750-ல் இருந்து ரூ.2778 ஆக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.28 உயர்ந்ததால் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.22 ஆயிரத்து 224 ஆக விற்பனையானது.

Leave A Reply

%d bloggers like this: