திருவனந்தபுரம், ஜூன் 9 -கேரளத்தில் இந்திய மாணவர் சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. முதல் நாளன்றே 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.மாநில அளவிலான உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை பாலக்காடு கண்ணாடி மேல்நிலைப்பள்ளியில் இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலச் செயலாளர் பி.பிஜு துவக்கி வைத்தார்.“சாதி, மத சக்திகளுக்கு எதிராக மனிதநேயத்தை உயர்த்திப் பிடிப்போம்” என்கிற முழக்கத்துடன் கேரளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கைப் பணி துவங்கியது.கேரளத்தில் இந்தக் கல்வி ஆண்டில் 15லட்சம் மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்.

Leave A Reply