குன்னூர், ஜுன்.9-நீலகிரி மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆழ் குழாய் (போர்வெல்) அமைக்கும் பணி தடை செய்யப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாலும் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாலும் ஆழ்குழாய் (போர்வெல்) அமைக்கும் பணியை உச்ச நீதி மன்றம் தடைசெய்துள்ளது. மேலும் ஆழ்குழாய் (போர்வெல்) அமைக்கும் பணி நடைப்பெற்றால், சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆழ்குழாய் அமைப்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். ஆழ்குழாய் அமைக்கும் எந்திரத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட டார்லிங்டன் பிரிட்ஜ் மையப்பகுதியில் தனியார் ஒருவர் ஆழ்குழாய் அமைத்து வருகிறார். அருகில் குடியிருப்போர் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். ஆனால் ஆனால் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடவும் இல்லை, நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை. இதையடுத்து எங்கள் வீடுகள் அதிர்வு ஏற்படுகிறது பணியை நிறுத்துங்கள் என குடியிருப்போர்கள் ஆழ்குழாய் அமைப்போரிடம் கோரியுள்ளனர். அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர் நாங்கள் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் குன்னூர் கோட்டாட்சியர் காந்திமதியிடம் புகார் அளித்தனர். புகாரினை பெற்றுக்கொண்ட கோட்டாச்சியர் வருவாய் வட்டாட்சியர் துரைசாமியிடம் போர்வெல் அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.