கரூர், ஜூன் 9 -தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னணி ஊழியர் களுக்கான பயிற்சி வகுப்பு கரூர் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற் றது.இந்த வகுப்பிற்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் வி.மோகன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் எம்.சுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினார். சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் பொன் ஜெயராம், மாவட்ட நிர் வாகிகள் பழ.நாகராஜ், குழந் தைவேல், எம்.சரவணன், என்.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில முன்னாள் துணைத் தலைவர் நெல்லை ஆறு முகம் ‘சங்கமும், குடும்பமும்’ என்ற தலைப்பில் கருத் துரை வழங்கினார்.சங்க நிர்வாகிகள் ஆர். குஞ்சிதம், அண்ணாதுரை, செல்வராணி, டல்லஸ், தாமோதரன், சுரேஸ், ஜீவா னந்தம், சுப்பிரமணியன், து.நாகராஜன், மாதவன், அங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply