புதுச்சேரி, ஜூன் 9-உயர்த்திய கட்டணத்தை திரும்பப்பெறாவிட்டால், பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க புதுவை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என்று இந் திய மாணவர் சங்கம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.மாணவர்களின் பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மாணவர் சங்கத்தின் சார்பில் காந்தி வீதி, நேருவீதி சந்திப்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பிரதேச தலைவர் ஹரிகரன் தலைமையில் நடந்த கண் டன ஆர்ப்பாட்டத்தில் பிர தேச செயலாளர் ஆனந்து பங்கேற்று பேசியதாவது:புதுச்சேரி காலாப்பட் டில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் அனைத்து பட்ட படிப்புகளுக்கும் தற்போது உள்ள கட்டணத்தில் இருந்து ஐந்து மடங்குகளாக கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் ஏழை-எளிய மாணவர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளா வார்கள். எனவே கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். கட்டண உயர்வை திரும்பப் பெறா விட்டால், ஜூலை30ல் புதுச் சேரி பல்கலைக்கழக வளா கத்தில் நடைபெறும் விழா வில் பங்கேற்க வரும் பிரத மர் மன்மோகன்சிங்கிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கருப்புக்கொடிகாட் டும் போராட்டம் நடத்தப் படும்.
இவ்வாறு அவர் பேசி னார்.கல்வி உரிமை சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும். சென்டாக் மாண வர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்க வேண்டிய தெகையை உடனே வழங்க வேண்டும். தனியார் கல்வி, கல்லூரி நிறு வனங்கள் கட்டணம் வசூ லிப்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இப்போ ராட்டம் நடைபெற்றது.முன்னதாக இந்திய ஜன நாயக வாலிபர் சங்க பிரதேச செயலாளர் பி.சரவணன், பொருளாளர் ஆர்.சரவணன், மாணவர் சங்க பிரதேச நிர் வாகிகள் கதிரவன், ரஞ்சித், தேவ் ஆனந்து உள்ளிட்ட திர ளான மாணவர்கள், வாலி பர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: