ஓசூர், ஜூன் 9-
ஓசூரில் உள்ள கீரின் வேல்லி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஓசூர் கல்வி மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளது.பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஓசூர் கீரின் வேல்லி பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர் கள் அனைவரும் 100 விழுக் காடு தேர்ச்சி பெற்றுள் ளனர்.பி. ஸ்ரீராம் 486 மதிப் பெண் பெற்று பள்ளி முதல் மாணவராகவும் ஓசூர் கல்வி மாவட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார். தேர்வெழுதியவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ள னர்.தொடர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்வில் 100 விழுக் காடு தேர்ச்சியும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்டத்தில் மூன்றாம் பிடித்ததோடு தொடர்ந்து 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வரும் இப்பள்ளி நிர்வாகத்தையும், மாணவர் களையும், பெற்றோர், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave A Reply

%d bloggers like this: