திருவாரூர், ஜூன் 9-திருவாரூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.நடராசன் ஒருங்கிணைந்த தூய்மைப்பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் நளினி, மருத்துவக்கல்லூரி முதல் வர், நகராட்சி ஆணையர், புதுவாழ்வுத்திட்ட அலுவ லர் மற்றும் அரசு அலுவலர் கள் கலந்து கொண்டனர்.தூய்மைப்பணியை தொடங்கிவைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிளாஸ் டிக் கப்புகள், கேரிபைகள் உள்பட மறு சுழற்சி முறை யில் பயன்படுத்த இயலாத 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் மாசு ஏற்படுத்துவதுடன், எளிதில் மக்காது சாக்கடை நீரில் அடைப்பு ஏற்படுத்தி கொசு உற்பத்திக்கு வழிவகுக் கிறது. இதனால் தொற்று நோய் பரவ காரணமாகிறது. பிளாஸ்டிக் அதிகமாக இருந் தால் நிலத்தடி நீர் பூமியில் தரையிறங்காமல் நீர் வளத்தை பாதிக்கும். பிளாஸ்டிக் பைகளில் உள்ள உண வினை உண்பதால் கால் நடைகளுக்கு ஜீரணக்கோளாறு ஏற்பட்டு இறக்க நேரிடுகி றது. பிளாஸ்டிக் பொருட் களை எரிப்பதால் ஏற்படும் நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து நுரையீரல்களை பாதிக்கின்றன; உயிர் அணுக் களின் உற்பத்தியையும் பாதிக் கிறது. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்க பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண் டும் என கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: