திருப்பூர், ஜூன் 9-கொச்சி – பெங்களூர் எரி வாயு குழாய் பதிக்கும் திட் டத்துக்கு திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் ஒட்டுமொத்த விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினர். இத் திட்டத்தின் நோக்கம், சிறப் பம்சங்கள் குறித்து கெயில் அதிகாரி கூறிய விளக்கங்களை ஏற்க மறுத்த விவசாயிகள், இத்திட்டத்தை மாற் றுப் பாதையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலி யுறுத்தினர்.வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் மா. மதிவாணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அஸ்ரா கார்க், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கெஜலட் சுமி உள்ளிட்ட அதிகாரி களும், பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.கூட்டம் தொடங்கியவுடன் ஊத்துக்குளி அருகே முல்லைநாயக்கனூரில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு வியாழனன்று ஏற்பட்ட எதிர்ப்புப் போராட் டம் குறித்து முதலில் விவா திக்கலாம் என்று ஆட்சியர் மதிவாணன் கூறினார்.
இதையடுத்து விவசாயிகள் வாழ்வுரிமை பாது காப்புக் குழு ஒருங்கிணைப் பாளர் ஜி.கே.நாகராஜன், அமைப்பாளர் வழுக்குப் பாறை பாலு, கொங்கு ராஜா மணி, உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் கே.சி.எம். பாலு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் ஆகியோர் பேசினர்.எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தால் விவசாயிகள் வாழ்வுரிமை பாதிக்கிறது. அந்த திட்டத்தை நிறை வேற்றி, பராமரிப்பது தொடர்பான கெயில் நிறுவனத்தின் சட்ட ஷரத்துக்கள் விவசாயிகளை அச்சுறுத்துவதாக இருக்கிறது உள்ளிட்ட பல்வேறு பாதிப் புகள் குறித்து விளக்கிக் கூறினர். விவசாய விளை நிலங்களில் இத்திட்ட குழாய் பதிப்பதால் விவசாயி களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இக்கூட் டத்தில் விவசாயிகள் பிரதி நிதிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து கெயில் நிறுவனத்தின் சார்பில் குழாய் பதிப்புப் பணி திட்ட அதிகாரி அங்கமுத்து எரி வாயு குழாய் பதிப்புப் பணி பற்றி விளக்கிக் கூறினார். எனினும் அவர் முழு உண் மைகளைச் சொல்ல வில்லை. பகுதி உண்மைகளை மறைக்கிறார் என்று விவ சாயிகள் குற்றம் சாட்டினர். எரிவாயு குழாய் பதிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று விவசா யிகள் வலியுறுத்தினர். எனினும் இதுபற்றி எவ்வித உத் தரவாதமும் தராத மாவட்ட ஆட்சியர் மா.மதி வாணன், திருப்பூர் கோட் டாட்சியர் முன்னிலையில் விவசா யிகள் பிரதிநிதிகளும், கெயில் நிறுவன அதிகாரி களும் பேசித் தீர்வு காண லாம் என்று கூறினார். இதே கருத்தையே அவர் தொடர்ந்து பேசிக் கொண் டிருந்தார். எனினும் அப் பணியை நிறுத்துவது பற்றி அவர் எதுவும் குறிப்பிட வில்லை.ஒரு கட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தலையிட்டு, விவசாயிகள் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு காணும் வரை குழாய் பதிக்கும் பணி கள் நிறுத்தி வைக்கப்படும் என்று கூறினார். கோட்டாட்சியர் முன்னிலையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித தீர்வும் காணாமல் முடிவடைந்த நிலையில், மீண்டும் வெள்ளியன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது.எனினும் இத்திட்டத்தை விளைநிலங்களில் நிறைவேற்ற விவசாயிகள் உறுதியான எதிர்ப்பைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: