சென்னை, ஜூன். 9-ரயில்வே கால அட்ட வணை ஜூலை 1ம் தேதியை மையமாக வைத்து ஆண்டு தோறும் வெளியிடப்படு கிறது. இந்த ஆண்டிற்கான புதிய கால அட்டவணை ஜூன் 29ம் தேதி (வெள்ளிக் கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த புதிய கால அட்ட வணையில் ரயில்வே பட் ஜெட்டில் அறிவிக்கப் பட்ட புதிய ரயில்கள் எப் போது விடுவது குறித்த தகவல் இடம் பெறும். தமி ழகத்திற்கு அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் இயக்கப்படு வது குறித்த விவரங்கள், நீட்டிப்பு செய்யக்கூடிய ரயில்கள், வாரம் இருமுறை, வாராந்திர ரயில்கள், தினசரி ரயிலாக மாற்றம் செய்வது குறித்த அறிவிப்புகள் வெளி யாக உள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல், எழும் பூரில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரமும் மாற்றம் செய்யப் படுகிறது. புதிய ரயில்கள் விட இருப்பதால் ஏற்கனவே உள்ள எக்ஸ்பிரஸ் ரயில் களின் நேரம் மாறுகிறது. புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம், சில முக்கிய ரயில்களின் வேகம் அதிக ரிக்கவும் செய்யப்படுகிறது. கால அட்டவணையில் பய ணிகளுக்கு பயன்படும் முக் கிய தகவல் அடங்கியுள் ளன. ரயில்வே ரூட் வரை படம், தெற்கு ரயில்வே, தென் மத்திய, தென் மேற்கு ஆகிய ரயில் சேவைகள் பற்றிய விவரமும் கொடுக்கப் பட்டு இருக்கும். விசா ரணை மற்றும் தகவல் மைய டெலிபோன்கள், டிக்கெட் பணம் திருப்ப பெறுதல், இழப்பீட்டு தொகை, முன் பதிவு செய்யும் வசதிகள், பயண சலுகை பெறும் வழி முறைகள் இதில் இடம் பெறும். இது தவிர புகார் தெரிவிக்க விஜிலென்ஸ் ஆபிஸ் டெலிபோன் எண் களும் தரப்பட்டு இருக்கும். புதியதாக வெளியிடப்படும்.

Leave a Reply

You must be logged in to post a comment.