தஞ்சாவூர், ஜூன் 8-இந்தியன் ஓவர்சீஸ் வங் கியின் முன்னுரிமை கடன் வழங்கும் விழா தஞ்சாவூர் கந்தசரஸ் வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற் றது.மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ். எஸ்.பழனிமாணிக்கம் பய னாளிகளுக்கு கடன்களை வழங்கி சிறப்புரையாற்றி னார்.இவ்விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 29 பேருக்கு ரூ. 29 லட்சத்து 65 ஆயிரமும் கல் விக் கடனாக 16 பேருக்கு ரூ.31 லட்சத்து 10 ஆயிரத்து 784ம், சிறுதொழில் கட னாக 24 பேருக்கு ரூ.1 கோடி யே 67 லட்சத்து 81 ஆயி ரத்து 65ம், 23 நெசவாளர் களுக்கு ரூ.16 லட்சத்து 30 ஆயிரமும், பால் மாடு வாங்க 57 பேருக்கு ரூ.30 லட் சமும், விவசாயக் கடனாக 9 பேருக்கு ரூ.14 லட்சத்து 20 ஆயிரத்து 575ம் காசோலை களாக வழங்கப்பட்டது.விழாவிற்கு பொது மேலாளர் கே.வி.கிருஷ் ணன் தலைமை தாங்கினார். முன்னதாக முதுநிலை மண் டல மேலாளர் எஸ்.ரகுவத் ஸசாரி அனைவரையும் வர வேற்றார். முதன்மை மேலா ளர் டி.பி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.