சிட்னி, ஜூன் 8-ஆஸ்திரேலியாவில் உள்ள ஆசிரியர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும் நிரந் தரம் செய்யாமல் ஒப்பந்த ஊழியர்களாக ஆசிரியர் கள் நியமிக்கப்பட்டு வரு கின்றனர். இவர்களின் நிலை யும் மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே அரசு உடனடியாக சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி 11 ஆயிரம் ஆசிரியர்கள் வேலைநிறுத் தம் செய்தனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.ஆஸ்திரேலியா நாட் டில் தென்கிழக்கு பகுதியில் விக்டோரியா மாநிலம் உள் ளது. இந்த மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் வேலை பார்க்கும் ஆசிரியர் கள் நீண்ட நாட்களாக சம் பள உயர்வு கோரி வருகிறார் கள். தேர்தலின்போது ஆசி ரியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று வாக் குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் வாக்குறுதி அளித்த படி ஆசிரியர்களுக்கு சம் பள உயர்வு அளிக்கப்பட வில்லை. இதனால் ஆசிரியர் கள் வெகுண்டு எழுந்தார்கள்.விக்டோரியா மாநிலத் தில் உள்ள 150 பள்ளிகளில் வேலைபார்க்கும் 11 ஆயிரம் ஆசிரியர்கள் 7-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் சம்பள உயர்வு கோரி நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென் றனர். அப்போது ஆசிரியர்க ளின் வேலைப்பளுவை குறைக்க வேண்டும். ஆசிரி யர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர் களாக நியமிப்பதை கைவிட வேண்டும். மிக மோசமான நிலையில் தற்போதுள்ள ஒப்பந்த ஆசிரியர்களின் நிலையை மேம்படுத்த வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத் தினர்.முன்னதாக ஆசிரியர் கள் சங்கத்துடன் அம்மா நில அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த் தையில் 2.5 சதவிகித சம்பள உயர்வு அளிக்க அரசு முன் வந்தது. ஆனால் ஆசிரியர் கள் சங்கம் 10 சதவிகிதம் சம் பள உயர்வு அளிக்க வேண் டும் என்று வலியுறுத்தியது. இதற்கு அரசு உடன்படவில் லை. இதனால் பேச்சுவார்த் தை தோல்வியில் முடிந்தது. இதுபற்றி ஆசிரியர்கள் சங்க தலைவர் மேரி புளுட் கூறும்போது, சம்பள உயர்வு கிடைக்காததால் ஆசிரியர் கள் கோபத்தில் உள்ளனர். அவர்கள் நீண்ட போராட் டத்துக்கு தயாராக உள்ள னர் என்றார்.போராட்டம் குறித்து விக்டோரியா மாநில முதல் வர் டிட்பெயிலி கூறும் போது, முன்னதாக ஆசிரி யர்கள் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் உடன்பாடு எட்டப்படவில் லை. இதையடுத்து ஆசிரியர் கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சம்பள உயர்வு, ஒப்பந்த ஆசிரியர்கள் நிலை, ஆசிரி யர்களின் வேலைப்பளு ஆகிய பிரச்சனைகள் குறித்து பேசி தீர்வுகாண ஆசிரியர் கள் மீண்டும் பேச்சு வார்த் தைக்கு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.