கடந்த சில ஆண்டு களாக சர்வதேச மக ளிர் தினமான மார்ச் 8ம் தேதியன்று விமான ஓட்டுநர், பணிப்பெண் கள் ஆகிய அனைவரும் பெண்க ளாக உள்ள குழுவைக் கொண்டு, விமானங்களை இயக்குவது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு விமானம் ஓட்டியது ஒரு பெண் என்பதால் ஒரு ஆண் பயணி விமானத்தில் ஏற மறுத்து மும்பை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் கிட்டத் தட்ட 65 ஆண்டுகளுக்கு முன்பே ஆண் களுக்கு விமானம் ஓட்ட பயிற்சி அளித்த முதல் பெண் பயிற்சியாளர் ஈவ்லின் நான்சன். 10.5.2012 அன்று மரணமடைந்த ஈவ்லினுக்கு வயது 102 ஆகும். 2002ம் ஆண்டு வரை, அதாவது 92 வயதாகும் வரை விமானம் ஓட்ட எண்ணற்றவருக்கு பயிற்சி கொடுத் தார் என்றால் அவர்தம் பெருமை சொல்லவும் வேண்டுமா?
இளமைக்காலம்
ரைட் சகோதரர்கள் முதல் விமா னத்தை ஓட்டிய ஆண்டு 1903. ஆறு ஆண்டுகள் கழித்து, 4.11.1909ல் ஈவ் லின் ஸ்டோன் பிறந்தார். தாய் பள்ளி ஆசிரியை. தந்தை நஷ்வில் ரயில் ரோடு கன்டக்டர். அமெரிக்காவில் கென்டகி மாநிலத்தில் பிறந்த அவர் கல்வி பயின்றது டென்னசி மாநிலத் திலாகும். அவருக்குஆறு வயதாகும் பொழுது, குடும்பம் டென்னசிக்கு குடி பெயர்ந்தது. டென்னசி வெஸ்லி யன் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று ஈவ்லின் இரண்டு ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றினார். டென்னசி பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது பிரையன் என்ப வரை சந்தித்து காதல் கொண்டார். 1931ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். கணவரின் குடும்பம் ‘ட்ரைக்ளீனிங்’ தொழிலில் ஈடு பட்டிருந்தது. பிரையன் 1941ல் அமெ ரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். இரண் டாம் உலகப் போர்க் காலம். தனது மாமனாரிடம், 250 டாலர்கள் பணம் பெற்றுக் கொண்டு ‘ட்ரைக்ளீனிங்’ தொழிலை நடத்தினார். ஈவ்லின் பொழுது போக்குக்காக விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டார்.
பொழுது போக்கு – வாழ்க்கையாய்..!
‘ஹாபி’ என ஆரம்பித்த விமா னம் ஓட்டுதல், ஈவ்லினின் வாழ்க்கை யையே மாற்றியது. விமானம் ஓட்டும் பயிற்சி தளத்திற்கு சென்றடைவதே கஷ்டமாக இருந்தது. வீட்டருகே ரயிலேறி. ஸ்டேஷனில் இருந்து பஸ் பிடித்து, பஸ் ஸ்டாண்டிலிருந்து கால் மைல் நடந்து, நடுவிலுள்ள ஆற் றில் படகை செலுத்தி, விமான நிலை யத்தைச் சென்றடைய வேண்டும். ஆற்றைக் கடக்க பாலம் கிடையாது. அலுக்காமல் , சலிக்காமல் இவ்வாறு பல போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து விமான நிலையம் சென்று, திரும்பி, விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டார். 8.11.1944 அன்று முதல் முறையாக தனியாக விமானத்தை ஓட்டினார். 1945ல் லைசென்ஸ் பெற்றார். 1946ல் விமா னம் ஓட்டும் சான்றிதழ் வழங்கப்பட் டது. 1947முதல் விமானம் ஓட்டப் பயிற்சியாளராக பணியாற்றத் துவங் கினார்.விமானம் ஓட்டக் கற்றுக் கொடுப் பதுடன், அவருக்கு மிகவும் பிடித்த ‘செஸ்னா’ ரக விமானங்களை விற் கும் டீலராகவும் இருந்தார். வணிக பத்திரிகைகளில் விமானம், விமானத் துறைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதினார். விமானம் ஓட்டும் பந்த யங்களில் பங்கேற்று, அமெரிக்கா விற்குள்ளேயும் அமெரிக்கா – ஹவானா பந்தயங்களில் (யவ்டர் பஃப் டெர்பி பந்தயங்கள்) 1951 – 1954 மற்றும் 1960ம் ஆண்டுகளில் பங்கு பெற்று, வெற்றி பெற்றுள்ளார். உலகிலேயே ஹெலிகாப்டர் ஓட்ட லைசென்ஸ் பெற்ற முதல் பெண் ஈவ் லின் ஆவார். ஜெட் உட்பட பயணி கள் விமானம், சரக்கு விமானம் என பல வகை விமானங்களை ஓட்டிய அனுபவம் ஈவ்லினுக்கு உண்டு.
உலக சாதனை
ஈவ்லின் மொத்தம் 5,76,354 மணி நேரம் (6 1/2 ஆண்டுகள்) விமானம் ஓட்டி சாதனை படைத்த ஒரே பெண். இதை விட கூடுதல் மணி நேரம் ஓட்டி சாதனை படைத்த ஒரே நபர் அலபாமாவைச் சேர்ந்த எட் லாங் என்பவர் மட்டுமே (64000 மணி நேரம்). லாங் இறக்கும் முன்பு விடுத்த அறிக்கையில் “அதிக மணி நேரம் விமானம் ஓட்டியவன் என்ற ரெக்கார்டை நான் ஏற்படுத்தி இருக்கி றேன். அதை அந்தப் பெண் விமானி ஈவ்லின் முறியடிக்க அனுமதிக்காதீர் கள்” எனக் கேட்டுக் கொண்டார். கண் பார்வை ‘க்ளுகோமாவால்’ பாதிக் கப்படாமல் இருந்திருந்தால், 2006ல் ஒரு விபத்தில் ஒரு கால் வெட்டப் படாமல் இருந்திருந்தால் எட்லாங் கேயின் ரெக்கார்டை ஈவ்லின் நிச் சயம் முறியடித்திருப்பார் என்கின்ற னர் விமான ஓட்டிகள். 100 வயதான பின்பும் 2010ல் தனது வீட்டருகே இருந்த விமான நிலையத்தை அவர் நிர்வகித்து வந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. அத்துடன் ‘மமா பர்ட்’ என்ற பட்டப் பெயர் அவருக்கு கிடைத்தது.சிறந்த விமான ஓட்டிகளாக இருக்க என்ன தகுதி வேண்டும்? ஈவ் லின் சொல்கிறார்: கடின உழைப்பு, கூர்ந்து கவனிக்கும் திறன் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு தேவை. 5000த்திற்கும் மேற்பட்ட விமான ஓட்டிகளை உருவாக்கிய பெருமை பெற்றவர். 9000க்கும் மேற்பட்டவர் கள் விமானம் ஓட்ட சர்டிபிகேட் அளித்தவர். பிரபல அமெரிக்க செனட்டர் ஹோவர்டு பேக்கருக்கு விமானம் ஓட்டக் கற்றுத் தந்தவர். தனது 92ம் வயதுவரை 2005ல் விமா னம் ஓட்ட பயிற்சி அளித்தவர். அவர் மொத்தம் விமானம் ஓட்டிய நேரம் (5.7 லட்சம் மணி ) 23 முறை சந்திர கிரகத்திற்கு சென்று வந்ததற்கு சமம் எனக் கூறப்படுகிறது.
அனைத்து ரக விமானங்களும் அவருக்கு பிடித் திருந்த போதிலும், நல்ல ராடார் கன்ட்ரோலுக்கு செஸ்னாவையே அவர் விரும்பினார்.பறப்பது, பறக்கக்கற்றுத் தருவது தவிர, விமானங்களை சர்வீஸ் செய் யும் நிலையம் (ஆபரேஷன் மோரிஸ் டவுன் ப்ளையிங் சர்வீஸ்) ஒன்றை யும் 33 ஆண்டுகள் நிர்வகித்த பெண் மணி ஆவார்.‘நேஷனல் ஃபளைட் இன்ஸ்ட்ரக்டர்ஸ் ஹால் ஆப்ஃ பேம்’ ‘கென்டகி, டென்னசி ஹால் ஆப்ஃபேம்’ விமன் ஏவியேஷன் பயணி யர் ஹால் ஆப்ஃபேம்’ என பல கௌர வங்கள் அவருக்கு கிடைத்தன. டென் னசி ஏரோநாடிக் கமிஷனில் 18 ஆண்டு கள் பணிபுரிந்தார். அதில் 4 ஆண்டு கள் அதன் தலைவராக இருந்தார். அவ ரது கணவர் பிரையன் 1963ல் கால மானார். 1965ல் ஜான்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1977ல் ஜான்சன் இறந்தார். 102 வயதில் இறந்த ஈவ்லி னுக்கு 2 பேரன்கள், 3 கொள்ளுப் பேரன்கள் உள்ளனர். “எனக்கு வயதா னால் விமானம் ஓட்டு வதை விட்டு விடுவேன்” என்ற அவர் வயதானதாக ஒரு பொழுதும் உணர வில்லை. ‘ஏரோன்கா சாம்ப்‘ முதல் ‘சூப்பர் க்ரூய்சர்டு’ வரை சொந்தமாக நிறைய விமானங்கள் வைத்திருந்த ஈவ்லின் ஆண்களுக்கென்றிருந்த துறை யில் தடம் பதித்த பெருமைக்குரிய முதல் பெண்மணி.

Leave A Reply

%d bloggers like this: