புதுக்கோட்டை, ஜூன் 9 -புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசே னை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் தீவிரப் பிரச்சா ரம் செய்து வருகின்றனர். சனிக்கிழமை மதியம் புதுக் கோட்டை மச்சுவாடி அரு கில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். சின்னத்துரை, செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ், எம்.ஜியாவுதீன், அன்ன வாசல் சண்முகம், என்.ராம சாமி, தேமுதிக திருவாரூர் மாவட்டச் செயலாளர் முத் துக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் உள் பட பலர் பிரச்சாரத்தில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அதிமுக ரவுடிகள் திடீரென்று கல், கட்டைகள் கொண்டு தாக் கியதில் பிரச்சார வாகனம் சேதம் அடைந்தது. தாக்கு தல் நடத்தியவர்களை பிடித்து இன்ஸ்பெக்டர் ஜெயமுரு கனிடம் மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயமுரு கன் அதிமுக ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை தப்பவிட்டுவிட் டார். இதை கண்டித்து உடனே மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சின்னத்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயமுரு கனை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்பட் டது. மறியலில் ஈடுபட்டவர் களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடு வித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: