தோழர் கிட்டி மேனன் இப்போது நம்முடன் இல்லை. கொள்கை உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் இடுக்கண் வருங் காலத்திலும் இன்முகத்துடன் செயலாற் றும் ஒரு மகத்தான தோழரின் வாழ்வு அவரது 90ஆவது அகவையில் நிறைவுற் றுள்ளது.1970களின் முற்பகுதியில், இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்வதற்குச் சற்றுமுன்பு, நான் முதன் முதலாக தோழர் கிட்டி மேனனைச் சந்தித்தேன். சந்திப்பின் நோக்கம், தில்லி யில் இந்திய சமூக அறிவியல் பள்ளி (ஐனேயைn ளுஉhடிடிட டிக ளுடிஉயைட ளுஉநைnஉநள)யை எங்ஙனம் வலுப்படுத்துவது, அதன் வெளி யீடான ‘சோசியல் சயிண்டிஸ்ட்’டை(ளுடிஉயைட ளுஉநைவேளைவ)யும் எங்ஙனம் வலுப்படுத்து வது என்பது குறித்து விவாதிப்பதற்காக அக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத் தில் பங்கேற்ற என்னைப் போன்ற ஆராய்ச்சி மாணவர்கள் இம்முயற்சியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண் டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
அந்த சமயத்தில் தோழர் கிட்டி, தில்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் ஜாம்பவான்கள் அமர்த்யா சென், சுகுமாய் சக்ரவர்த்தி, கே.என்.ராஜ் போன்றோருடன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதனை அடுத்து தோழர் கிட்டி, ‘மார்க்சின் மூல தனம்’ நூலின் ஒவ்வொரு அத்தியாயம் குறித்தும் நடத்திய வகுப்புகளில் நாங்கள் பங்கேற்றோம். இவ்வாறு இவர் வகுப்பு எடுத்ததோ, தில்லியில் இந்திய மாணவர் சங்கத்தை உருவாக்குவதிலும், அதே போன்று தில்லிப் பல்கலைக்கழக ஆசி ரியர் இயக்கத்தைக் கட்டி உருவாக்கு வதிலும் இவர் ஆற்றிய பங்களிப்போ இன் றையதினம் பலருக்குத் தெரியாது. 1960 களின் பிற்பகுதியில் அவர் கட்சியின் மாணவர் – ஆசிரியர் கிளைக்குச் செயலா ளராக இருந்தார். தில்லிப் பல்கலைக் கழக அகடமிக் கவுன்சிலிலும் பல ஆண்டு காலம் உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டிருந்தார்.1922இல் பம்பாயில் பிறந்த தோழர் கிட்டி, அவருக்கு ஆறு வயதாக இருக்கும் போது, அவரது குடும்பம் இங்கிலாந்துக் குப் புலம் பெயர்ந்தது. அவர் கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியிலும், பின்னர் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறு வனத்திலும் பயின்றார். இக்கால கட்டத் தில் அவர் பாசிச எதிர்ப்பு இளைஞர் இயக் கத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். தொடர்ந்து மார்க்சிய சித்தாந்தத்தையும் தழுவிக் கொண்டார். தோழர் கிட்டி 1947இல் இந்தியாவிற் குத் திரும்பினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் இருந்த தோழர் ராமதாஸ் மேனனைச் சந்தித்தார். அவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் சென்னைக்குப் புலம் பெயர்ந்தார். ராமதாஸ் கட்சி முழு நேர ஊழியராக இருந்ததாலும், கட்சி நடவடிக்கைகளில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாலும், குடும்பத்திற்காக யாரா வது ஒருவர் பொருளீட்ட வேண்டிய நிலை உருவானது. எனவே தோழர் கிட்டி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் விரிவு ரையாளராகப் பணியில் சேர்ந்தார். தில் லிக்குத் திரும்பும்வரை அவர் இப்பணியில் நீடித்தார்.அவர், இங்கிலாந்திலிருந்து சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியா வந்த போது, மீண்டும் இங்கிலாந்து செல்ல வேண்டுமென்ற எண்ணத்துடன்தான் வந்திருந்தார். ஆயினும் இந்தியாவில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களு டனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியு டனும் தன்னைப் பிணைத்துக் கொண் டார். இதனால் இங்கிலாந்திலிருந்த அவர் தாயாரும், அவருடைய சகோதரர்களும் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.குடும்பத்தினரின் வேண்டுகோள் களை உதறி எறிந்துவிட்டு, ஒரு செய லூக்கமுள்ள கம்யூனிஸ்ட்டாக மாறி, இந் தியப் புரட்சிக்கான போராட்டங்களில் முழுமையாகப் பங்கேற்றார்.1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதை அடுத்து, கட்சியின் தலைமையகம் கல்கத்தாவிலிருந்து தில் லிக்கு மாறியது. தோழர் ராமதாசுக்கு, கட்சியின் வார இதழான பீப்பிள்ஸ் டெமாக் ரசியை வெளிக் கொணரும் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. தோழர் கிட்டியும் தில் லிக்கு மீண்டும் திரும்பினார்.
தில்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்ற அதே சமயத்தில் தன் இரு மகன்களையும் வளர்க்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண் டார். அத்துடன் எங்களைப் போன்றவர் களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தும் பணி யையும் தொடர்ந்து செய்து வந்தார். ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த எங்களை, அங்கு வேலை செய்திடும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள் தொடங்குமாறு கேட்டுக் கொண்டார். நாங்களும் அதனைச் செய்தோம்.அவசரநிலைப் பிரகடனம் தோற்கடிக் கப் பட்ட பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைமையகமும், பீப் பிள்ஸ் டெமாக்ரசி வார இதழும் தில்லிக்கு மாற்றப்பட்டது. தோழர்கள் ராமதாஸ், கிட்டி குடும்பத்துடன் மீண்டும் தில்லிக்கு வந் தார்கள். ராமதாஸ் 1985இல் அகால மரண மடைந்த பின்னர் கிட்டி, பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியர் குழுவில் இணைந்தார். அவர் இறக்கும் வரை அதில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். தனிப்பட்ட முறையில் நான் அவரிட மிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். கிட்டியின் ஆசை எப்போதுமே, பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழை உலகின் சிறந்த கம் யூனிஸ்ட் இதழ்களில் ஒன்றாகக் கொண்டு வர வேண்டும் என்பதுதான்.அவரது மரணத்தின் மூலம் நாம் அர்ப் பணிப்பு உணர்வுடன் கூடிய ஒரு கம்யூ னிஸ்ட்டை, ஒரு மனிதநேயமிக்கவரை, ஒரு கனிவான ஆசிரியரை இழந்து நிற் கிறோம்.தமிழில்: ச.வீரமணி

Leave A Reply

%d bloggers like this: