திருவாரூர், ஜூன் 8-திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சிப்பணிகள் நடை பெற்று வருகின்றன. குறிப்பாக திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம் 7 ஆயி ரத்து 428 பணிகள், 327 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடை பெற்று வருகின்றன. இந்த பணிகளை வியாழக்கிழமை யன்று செய்தியாளர்களுடன் சென்று மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் ஆய்வு செய்தார். காலை தொடங்கி, மாலை வரை இப்பயணம் நீடித்தது.அப்போது செய்தியாளர் களிடம் பேசிய மாவட்ட ஆட்சி யர், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள திருவாரூர் மாவட் டம் மேலும் வளர்ச்சி பெறு வதற்கும் முன்னேற்றத்தை நோக்கி செல்வதற்கும் நிறைய வாய்ப்பு உள்ளது. தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மூலமாக வளர்ச்சிப் பாதையை நோக்கி, திருவாரூர் மாவட்டம் செல்கிறது; மாவட் டத்தை மேலும் முன்னேற்று வதற்கு அனைத்து பகுதியின ரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், கொரடாச்சேரி ஆகிய பகுதிகளில் நடை பெற்று வரும் பல்வேறு பணி களை ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
ஆய்வின் நிறைவில் நீடா மங்கலம் மூணாறு தலைப்பில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழகத் திலேயே முதல்முறையாக 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலமாக ஆறுகளில் மண்டிக் கிடக்கும் நெய்வேலி காட்டா மணக்கு, ஆகாயத்தாமரை மற் றும் கோரைகளை அகற்றும் பணி திருவாரூர் மாவட்டத் தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 579 கி.மீ தூரத்திற்கு ஆறுகள் மற்றும் பாசனப்பகுதிகளில் இத்திட் டத்தின் மூலம் ஆக்கிரமணங் கள் அகற்றப்பட்டுள்ளன. இதில் பணியாற்றும் கிராமப்புற மக்கள் தங்களின் சொந்த வேலையாக கருதி இதனை சிறப்பாக செய்து வருகின்றனர். இது பாராட்டத் தக்கது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயி கள் சங்க பிரதிநிதிகள் கேட் டுக்கொண்டதன் அடிப்படை யில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலைப்பணிகள்
மேலும் திருவாரூர் மாவட் டத்தில் 455 கி.மீ நீளத்திற்கு 8 ஆயிரத்து 631 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. இதில் 148 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 84 சாலைப்பணிகள் நடை பெற்று வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் 1233 பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். மாவட்ட ஆட்சியர் சி.நட ராசன் பொறுப்பேற்ற சில மாதங் களிலேயே விரைவாக நடை பெற்று பல பணிகள் முடிவுற் றும் சில பணிகள் முடிவுறும் தருவாயிலும் இருப்பது இந்த நேரடி ஆய்வின் மூலம் தெரிய வந்தது. இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முக மையின் செயற்பொறியாளர் எஸ்.சேகர், நன்னிலம், குட வாசல், கொரடாச்சேரி, நீடாமங் கலம் வட்டாரவளர்ச்சி அலுவ லர்கள், உதவிப் பொறியாளர்கள், ஒன்றியப் பொறியாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.