புதுதில்லி, ஜூன் 8-வங்கக்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட் டுள்ள பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழு தலை வர் பாசுதேவ் ஆச்சார்யா வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் கொள்கைகளின் காரண மாக இந்திய கடல்களுக்குள் மீன்பிடித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட பெரும் கார்ப் பரேட் நிறுவனங்களின் மீன்பிடிக் கப்பல்கள் கடல் முழுவதையும் அரித்தெடுத்து மிகப்பெரு வாரியான மீன்களை அள்ளிச்செல்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மத்திய விவசாயத்துறை யின் ஒரு பகுதியான கால்நடைவள துறையுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.விவசாயத் துறைக்கான நாடாளுமன்றக்குழு வின் தலைவருமாகிய பாசுதேவ் ஆச்சார்யா, வெள்ளியன்று தில்லியில் கிரீன் பீஸ் அமைப்பு நடத் திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். ‘இந்திய மீன்வளத்தின் எதிர்காலம்’ என்ற பொருளில் கிரீன்பீஸ் அமைப்பு தயாரித்துள்ள நூலை அவர் வெளியிட்டார். அப்போது உரையாற்றிய பாசுதேவ், மீன் பிடித் தொழில் தொடர்பாக புதிய கொள்கை ஒன்றை வரையறுக்க அரசு முடிவு செய்திருப்ப தாகவும், மீன்பிடித் தொழிலில் சிறப்புப் பொரு ளாதார மண்டலங்களை உருவாக்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு கால்நடை வளத்துறையுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது எனக்குறிப்பிட்ட அவர், இந்திய கடல்களில் கிடைக்கக்கூடிய பல்வேறு விதமான, மிகவும் சத்து நிறைந்த மீன் களை பன்னாட்டு நிறுவனங்கள் பெருவாரியாக அள்ளிச்செல்வது குறித்து மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரிடம் தாம் கவலை தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.இதுதொடர்பாக அமைச்சருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், “விவசாயத்துறை அமைச்சரிட மிருந்து எனக்கு பதிலும் வந்தது. இந்திய கடல் பகுதிகளிலில் பெரிய அளவிலான மீன்பிடிக்கப் பல்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதால் நமது நலன்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதே அவரது பதில்” என்று பாசுதேவ் அம்பலப் படுத்தினார்.நமது தேசிய கடல் வளத்தில் மீன்பிடித் தொழிலுக்கான பகுதி வெகுவாகக் குறைந்து வருகிறது எனக் குறிப்பிட்ட பாசுதேவ், இன் றைய நிலையில் மொத்தக்கடல் பகுதியில் வெறும் 5.4 சதவீதம் பகுதியிலேயே மீன் உற் பத்தி நடைபெறுகிறது என்றும், இத்துறையில் சீனா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
150 லட்சம் மீனவர்கள்
இந்நிகழ்ச்சியில் பேசிய ஒடிசா மாநில எம்.பி., ராமச்சந்திர குந்தியா, பெருவாரியான மீன்களை பன்னாட்டுக்கப்பல்கள் அள்ளிச் செல்வது இந்திய கடல் பகுதியில் உயிரி பன் முகத்தன்மைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார். “இந்தியாவின் கடலோரப்பகுதிகளில் 150 லட்சம் மக்கள் தங்களது அன்றாட பிழைப்புக் காக மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள னர். ஆனால் பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் கப்பல்கள் மீன்பிடித்துக்கொள்ள மத்திய அரசு உரிமம் அளித்ததன் விளைவாக மேற்கண்ட மீனவர்களில் 90 சதவீதம் பேர் கடும் தாக்குத லுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தியக் கடலோரப் பகுதி முழுவதிலும் இது உள்ளூர் பொருளாதா ரத்தை கடுமையாக பாதித்துள்ளது. மீனவர்க ளின் வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள் ளது” என்றும் குந்தியா குறிப்பிட்டார். விவசா யத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் ஆவார்.எனவே இத்தகைய நிலைமை மேலும் மோசமடைவதை தடுத்து நிறுத்த, இந்திய கடல் பகுதிகளில் உயிரி சமநிலையை பாதுகாக்க, பன் னாட்டு பெரும் நிறுவனங்களின் மீன்பிடிக்கப் பல்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண் டும் என்று இரு எம்.பி.க்களும் வலியுறுத்தினர்.(பிடிஐ)

Leave A Reply

%d bloggers like this: