பெய்ஜிங், ஜூன் 8-புதியப் பகுதிகளில் உறவை விரி வுபடுத்த இந்தியா-சீனா அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, மத்திய ஆசியா மற்றும் எல்லை தாண்டி வரும் ஆறுகள் குறித்தும் புதிய தூதரகங்கள் துவக்குவது குறித்தும் பேசினர்.பெய்ஜிங்கில் ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட் டின் இடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் ஜியேச்சியுடன் பேசினார். 40 நிமி டம் நடந்த இந்த பேச்சுவார்த்தை யில் இருநாட்டு நல்லுறவு குறித்து பேசப்பட்டது.இந்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் எல்லை தாண்டி வரும் நதிகள் குறித்த விவகாரம் குறித்து, அடுத்த மாதம் ஆலோசிக்க இருப்பதை இருநாடுகளும் உறுதிப் படுத்தின. முந்தைய முடிவுகளை செயல்படுத்த அப்போது செயல் குழு கூடுகிறது.கடந்த சந்திப்புகளின்போது பிரம்மபுத்ரா நதியின் ஓட்டத்தை திசைதிருப்பும் நோக்கம் சீனாவி டம் இல்லை. திபெத்தில் ஜாங்குமு நதி திட்டம் மட்டும் மேற்கொள்வ தாக இந்தியாவின் கவலையை, தீர்க் கும் வகையில் சீனா தெரிவித்தது.தற்போதைய பேச்சுவார்த்தை யில் இந்தியாவில் 3வது துணைத் தூதரக அலுவலகம் அமைக்க, சீன அதிகாரிகள் விருப்பம் தெரிவித்த னர்.
தலைநகர் தில்லியில் சீனத்தூதர கம் உள்ளது. இதையடுத்து, மும்பை, கொல்கத்தாவில் துணைத் தூதரகங் கள் உள்ளன. தற்போது 3வது துணைத்தூதரக அலுவலகத்தை துவக்க சீனா விரும்பியுள்ளது.இவ்விஷயத்தை உரிய நிலைக்கு கொண்டு செல்வோம் என இந்திய அதிகாரிகள் உறுதியளித்தனர். சீனா வில், தனது ராஜிய இருப்பை விரிவு படுத்தவும் இந்தியா தீவிரம் கொண் டுள்ளது. செங்குடு மற்றும் சிச்சு வான் மாகாணங்களில் இந்தியா துணைத்தூதரகம் துவக்க சீன அதிகாரிகள் சாதகமாக இருந்தனர். சீனாவில் ஷாங்காய், குவாங்சுவில் இந்தியத் துணை தூதரகங்கள் உள்ளன.செங்குடு, சிச்சுவான் மாகாணத் தில் அதிக இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தென் மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் பகுதியில் இந்திய துணைத்தூதரகம் அமைப்பதையும் சீனா வரவேற்றது. இந்தப்பகுதியை தென் ஆசியா நுழைவு வாயிலாக சீனா பார்க்கிறது.இரு நாடுகளும் மொழி ஒத்து ழைப்புத் தொடர்பாக கல்வி அமைச் சகங்கள் ஒத்துழைப்பு மூலம் இந் திய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக் கும் விஷயத்தை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளன.இதுநாடுகள் வர்த்தக உறவு குறித்து விவாதிக்கப்பட்டபோது, 2700 கோடி டாலருக்கு கூடுதலான வர்த்தகம், சீனாவுக்கு சாதகமாக இருப்பது குறித்தும் பேசப்பட்டது. முந்தைய நிலையைக் காட்டிலும், இருநாடுகளின் உறவு மிக, மென் மையாக உள்ளது என இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கணித்துள்ளதாக இந்தியத் தூதர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.சீன வர்த்தகர்களுடன் 2 இந்திய தொழிலதிபர்கள் தீபக் ரசேஜா, ஷியாம் சுந்தர் ஆகியோர் சட்டப் போராட்டம் நடத்தி வருவது குறித் தும், இந்திய அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: