புதுதில்லி, ஜூன் 8 -பாரதிய ஜனதா கட்சியில் அண்மைக்காலமாக கோஷ்டி மோதல் தீவிரமடைந்துள்ளது. இந் நிலையில் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலர் சஞ்சய் ஜோஷி கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவரது ராஜினாமாவை பாஜகவும் ஏற்றுக் கொண்டுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரான சஞ்சய் ஜோஷி, சங் பரிவார் அமைப்பில் தீவிர ஈடுபாட் டாளராக இருந்து வந்தார். பின்னர் குஜராத் மாநில பாஜகவில் இணைந்து பணியாற்றினார். குஜ ராத்தில் கேசுபாய் படேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு நரேந்திர மோடி முதல்வராக பதவி ஏற்ற நிலையில் சஞ்சய் ஜோஷி தில்லி யில் கட்சிப் பணியாற்றிவந்தார். பாஜகவின் தேசிய செயலாள ராகவும் ஆனார்.இருப்பினும் நரேந்திர மோடிக் கும் சஞ்சய் ஜோஷிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. ஒருகட் டத்தில் ஆபாச சிடி விவகாரத்தில் சஞ்சய் ஜோஷி சிக்கிக் கொள்ள அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக சஞ்சய் ஜோஷியை நியமித்து அவரை மீண்டும் கட்சிப் பொறுப்பில் அமர்த்தினார் பாஜக தலைவர் நிதின் கத்காரி. ஜோஷியின் நியமனத்தை மோடியால் சகிக்க முடியவில்லை. உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சா ரத்துக்கு மோடியும் போகவில்லை.இந்த சூழலில் மும்பையில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சஞ்சய் ஜோஷியை கட்சிப் பதவியி லிருந்து நீக்கினால் அல்லது அவர் விலகினால்தான் தேசிய செயற் குழுவுக்கு வருவேன் என்று மோடி அடம்பிடிக்க, வேறு வழி இல் லாமல் ஜோஷி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். இருப்பினும் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாக்பூரில் போட்டியிட உள்ள நிதின் கத்காரியின் தேர்தல் பொறுப்பாளரானார்.இதனிடையே தில்லியிலும் சஞ்சய் ஜோஷி- நரேந்திர மோடி இடையே போஸ்டர் யுத்தம் தொடர்ந்தும் நிகழ்ந்து வந்தது. இந்த நிலையில் வெள்ளியன்று திடீரென பாரதிய ஜனதா கட்சி யில் இருந்தே தாம் விலகுவதாக ராஜினாமா கடிதத்தை சஞ்சய் ஜோஷி அனுப்பியிருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.