புதுதில்லி, ஜூன் 8 -இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் விதமாக, பாகிஸ்தானில் இருந்து நேரடி அந்நிய முதலீட்டை இந்தியா அனுமதிக்கிறது என, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச் சர் ஆனந்த் சர்மா வெள்ளிக் கிழமையன்று கூறினார்.அருகாமை நாடுகளின் பொருளாதார உறவை வலுப் படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்திய முதலீட்டை பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் முதலீட்டை இந்தியாவிலும் அனுமதித் துள்ளோம். பாகிஸ்தானில் இருந்து எவ்வளவு முதலீடு வந்தாலும் அதனை அனு மதிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது என அவர் தெரிவித்தார். பாகிஸ்தானை ஈடுபடுத்தாமல், தெற்காசிய தாராள வர்த்தக ஒப்பந்தத்தை (சாப்டா) முன் னோக்கி கொண்டு செல்ல முடி யாது என்பதை நாங்கள் தெளி வாக உணர்ந்துள்ளோம் என் றும் அமைச்சர் குறிப்பிட்டார்.கடந்த ஒரு ஆண்டில் இந் தியா – பாகிஸ்தான் வர்த்தக உறவு முன்னோக்கிய நிலையில் இருந்துள்ளது. சீன தொழிலதி பர்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ள னர். சீன முதலீட்டை நாங்கள் ஊக்கப்படுத்துவதுடன், வர வேற்கவும் செய்கிறோம் என அவர் தெரிவித்தார். பாகிஸ் தானிலிருந்து, முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (டிஐபிபி) ஒரு கருத்துருவை நிதித்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி யுள்ளது. அதில், பாகிஸ்தானின் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க அந்நிய பரிவர்த் தன நிர்வாக சட்டத்தில் (பெமா) மாற்றம் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் முதலீடு, அந்நிய முதலீடு மேம்பாடு அமைப்பு (எப்ஐபிபி) மூலமே நடைபெறும். இந்த அமைப் புக்கு நிதித்துறை அமைச்சகத் தின் பொருளாதார விவகாரத் துறைச் செயலாளர் தலைவ ராக உள்ளார்.தற்போதைய அந்நிய நேரடி முதலீடு கொள்கைப் படி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களைத் தவிர, இதர நாட்டு நபர்களும் இந்தியாவில் முதலீடு செய்ய முடியும். வங்க தேச முதலீட்டை எப்பிபிஐ வழியாக இந்திய அரசு ஏற் கெனவே அனுமதித்திருந்தது.

Leave A Reply

%d bloggers like this: