பெய்ஜிங், ஜூன் 8- ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை குவிப்பது என முடிவு செய்து அதற்கான புதிய கொள் கையை அறிவித்து செயல் படுத்த முயன்று வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக் காவின் ஆதிக்கத்தை எதிர் கொள்ள சீனாவும், ரஷ்யாவும் இணைந்து ராணுவ பயிற்சி யை ஆசிய – பசிபிக் பிராந்தி யத்தில் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்கா உலகம் முழு வதும் உள்ள தனது படை பலத் தில் 60 சதவிகிதம் அளவிற்கு ஆசிய – பசிபிக் பிராந்தியத் தில் 2020ம் ஆண்டிற்குள் குவிப்பது என அறிவித்துள் ளது. இதற்கான திட்டத்தையும் வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதனால் அமைதியாக காணப் பட்ட ஆசிய – பசிபிக் பிராந்தி யத்தில் அமைதியற்ற சூழல் உருவாகும் என ஆசிய நாடு கள் அச்சமடைந்துள்ளன. இந் நிலையில் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராகவும், அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையிலும் சீனாவும், ரஷ்யாவும் கூட்டாக இணைந்து ஆசிய – பசிபிக் கடல் பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது என முடிவு செய்திருக்கின்றன. முன்னதாக சீன தலை நகர் பெய்ஜிங்கில் நடைபெறும் ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பெய் ஜிங்கிற்கு வந்தார்.
பின்னர் சீன தலைவர்களுடன் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் அமெ ரிக்காவின் படை குவிப்பு திட் டம் குறித்து விவாதித்தார். மேலும் ஆசிய-பசிபிக் பிராந்தி யத்தில் அமெரிக்காவின் ஆதிக் கத்தை முறியடித்து அமைதி யான சூழல் உருவாக்குவது குறித்தும் விவாதித்தனர்.அதன் அடிப்படையில் சீனாவும், ரஷ்யாவும் கடற் படை பயிற்சியை ஆசிய – பசி பிக் பிராந்தியத்தில் மேற்கொள் வது என முடிவு செய்யப்பட் டுள்ளது. இந்த இரு நாடுகளும் ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் கடற்படை பயிற்சியில் ஈடுபடு வது இதுவே முதல் முறை யாகும். இந்த கூட்டு ராணுவ பயிற்சி உலகத்தின் கவனத் தை ஈர்த்துள்ளது. கடற்படை பயிற்சியில் சீனாவின் 16 போர் கப்பல்கள், 2 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ரஷ்யாவின் 4 போர் கப்பல்கள் இணைந்து இந்த பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: