சென்னை, ஜூன் 8-உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய் யும் முறையில் வெளிப் படைத் தன்மை இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.செல்லமேஸ்வர் வேதனை தெரிவித்தார்.சென்னை உயர்நீதிமன் றத்தின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகளை முன்னிட்டு, புதிய கூடுதல் லா சேம்பரில் சொற்பொ ழிவு நிகழ்ச்சி நடத்தப்பட் டது. நீதித்துறையின் பொறுப்பு மற்றும் சீர்திருத் தம் என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நீதிபதி ஜெ.செல்லமேஸ்வர் பேசிய தாவது: வழக்கறிஞர்களை நீதி பதிகளாக நியமிக்கும் முறை யிலும் குறைபாடுகள் உள்ளன. நீதிபதியாக பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்யும்போது, அந்த வழக்கறிஞர் தொழி லில் பெற்ற வெற்றியையும் வருமானத்தையும் அளவு கோலில் ஒன்றாக வைக்கக் கூடாது. இதில் அதிருப்தி நிலவுகிறது.வழக்கறிஞர்களை நீதி பதியாக நியமிப்பதில் வெளிப்படையான உறுதி யான முறை அவசியம் தேவை. அதுபோல் ஒருவ ரது கல்வி மற்றும் ஆளு மையை மட்டும் பதவி உயர் வுக்காக கருத்தில் கொள்வ தையும், நுட்பமான முறை யாக ஏற்க முடியாது. அதி லுள்ள வாக்கெடுப்பு முறை யையும் நான் ஆதரிப்ப தில்லை.வழக்கறிஞர் தொழிலில் இருப்பவர் நிதி அம்சங் களில் என்ன கொள்கையை கடைப்பிடித்தாரோ, அதே கொள்கையைத்தான் நீதி பதியாகும் போதும் கடைப் பிடிக்கின்றனர். நீதிபதிகள், வானத்தில் இருந்து குதித்த வர்கள் அல்ல. எனவே வழக் கறிஞர்களை, நீதிபதிகளாக தேர்வு செய்யும் விவகாரத் தில் தேர்வாளர்கள் நல்ல முறையை உருவாக்க வேண் டும். இவ்வாறு அவர் பேசி னார்.விழாவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள், வழக் கறிஞர் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.